ஏன் வரவில்லை சிதம்பரம்?

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:

சிதம்பரத்தில் நடந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில்முக்கியத் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம்,பாண்டிச்சேரி தமாகா தலைவர் கண்ணன் ஆகியோர் கலந்து கொள்ளாமல்புறக்கணித்தனர்.

ஜெயலலிதா ஊழலை எதிர்த்தும், அவரது அதிமுகவுடன் கூட்டணி வைப்பதைஎதிர்த்தும் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூப்பனார் வெளியேறி புதிய கட்சியான தமிழ்மாநில காங்கிரஸை ஆரம்பித்தபோது, அதற்கு முக்கியக் காரணமாக கூறப்பட்டவர்சிதம்பரம்.

மூப்பனாரின் வலது கரமாக கருதப்படும் சிதம்பரம் சமீப காலமாக கட்சிக்கூட்டங்களில் காணப்படவில்லை. அவருக்கும், மூப்பனாருக்கும் இடையேமனத்தாங்கல் என்று கூறப்பட்டாலும் கூட, அது பெரிதாகப் பேசப்படவில்லை.

அதிமுகவுடன், தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டபோது சிதம்பரம் அதைஎதிர்த்ததாக முதலில் கூறப்பட்டது. சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது,ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வழக்குகளை முடுக்கி விட்டவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில்தவறில்லை என்று மூப்பனார், சிதம்பரத்திற்கு சமாதானம் கூறி அவரைச்சாந்தப்படுத்தினார்.

சமீப காலமாக வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக, தமாகா கூட்டணி வெற்றிபெற்றால் ஆட்சியில் பங்கு அளிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் மூப்பனார்உள்பட அனைத்து மட்டத் தலைவர்களும் பேசி வந்தனர். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றுதிட்டவட்டமாக தெரிவித்தார்.

பொது மேடையில், மூப்பனாரை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஜெயலலிதா இவ்வாறுகூறியதால், கடும் அதிர்ச்சியில் உறைந்த தமாகா தலைவர்கள் சிதம்பரத்தில்செயற்குழுவைக் கூட்டினர். தமாகாவின் எதிர்காலமே இந்தக் கூட்டத்தில் தான்அடங்கியுள்ளதாகப் பேசப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மூப்பனாருக்கு அடுத்த தலைவராக கருதப்படும் சிதம்பரம் ஏன்சிதம்பரத்திற்கு வராமல் புறக்கணித்தார் என்பதே இப்போதுவிவாதத்துக்குள்ளாகியுள்ளது. அவர் வருவார் என்று எதிர்பார்த்து அறை கூட பதிவுசெய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அவர் வரவில்லை. அவரது கருத்துக்களைமூப்பனார் இப்போதெல்லாம் சரிவரக் கேட்பதில்லை என்று கட்சி வட்டாரத்தில்கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே, சிதம்பரம் கூட்டத்தை சிதம்பரம்புறக்கணித்து விட்டதாகத் தெரிகிறது.

சிதம்பரம் வீட்டில் கேட்டபோது அவர் வெளியூர் சென்றிருப்பதாகத்தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த ஊர் என்பது தெரிவிக்கப்படவில்லை.

புதுவை கண்ணனும் சிதம்பரம் செயற்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்தார். சமீபத்தில்சென்னையில் நடந்த செயற்குழுக் கூட்டம், புதுவை அருகே நடந்த தமாகாவின்முப்பெரும் விழா ஆகியவற்றையும் கண்ணன் புறக்கணித்தார்.

சிதம்பரம் போலவே, மூப்பனார் மீது கண்ணன் வருத்தத்தில் இருப்பதாகக்கூறப்படுகிறது.

நெருக்கடியான சூழ்நிலையில், முக்கியத் தலைவர்களான சிதம்பரமும், கண்ணனும்செயற்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்தது, கட்சி வட்டாரத்தில் பரபரப்பாகபேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+