பிணைக் கைதியைக் கொல்வோம் ... பிலிப்பைன்ஸ் தீவிரவாதிகள் மிரட்டல்
ஸாம்போஆங்கோ (பிலிப்பைன்ஸ்):
எங்களது கோரிக்கைகள் குறித்து அமெரிக்காவும், பிலிப்பைன்ஸும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் தாங்கள் பிடித்து வைத்துள்ளஅமெரிக்கரைக் கொன்று விடுவோம் என்று பிலிப்பைன்ஸ் நாட்டுத் தீவிரவாதிகள் மிரட்டியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அபு சய்யூஃப் என்ற முஸ்லிம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த கொரில்லா தீவிரவாதிகள் ஜெஃப்ரி ஷில்லிங் என்ற அமெரிக்கர்உள்பட 7 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
1993-ம் ஆண்டு நியுயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக மையக் கட்டடத்தில் குண்டு வைத்தது தொடர்பாக 3 முஸ்லிம் தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை பிலிப்பைன்ஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.
கோரிக்கைகள் குறித்து எங்களுடன் அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் அரசுகள் பேச்சு நடத்தவேண்டும். பேச்சு நடத்த அந்த நாட்டு அரசுகள்வரவில்லை என்றால் எங்களிடம் பணயக் கைதியாக உள்ள அமெரிக்கரைக் கொன்றுவிடுவோம்.
நாங்கள் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். அமெரிக்கர் மட்டுமல்ல பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சு நடத்த நாங்கள் எப்போதும்தயாராகவே உள்ளோம். இரு நாட்டு அரசுகளும் உடனடியாக பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தால் எல்லாம் நல்லதாக முடியும் என்று தீவிரவாதிகள்அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications