உளவாளியை விடுவிக்க ரஷ்யாவைக் கோருகிறது அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்க்டன்:

ஒற்றர் என்ற சந்தேகத்தின் பேரில் ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எட்மண்ட் போப் என்ற அமெரிக்கரை விரைவில் விடுவிக்க வேண்டுமென்றுஅமெரிக்கா, ரஷ்யாவிடம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க கடற்படை உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் எட்மண்ட் போப். வயது 54. இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் ரஷ்யா சென்றிருந்த போது ரஷ்யஉளவுத்துறை அதிகாரிகள், ஒற்றர் என்று கருதி கைது செய்தனர்.

இவருக்கு ரஷ்ய விஞ்ஞானிகளுடன் தொடர்பு உள்ளதாகவும், தண்ணீருக்கடியில் செலுத்தப்படும் ஏவுகணை குறித்த விவரங்களை இவர் ரகசியமாக சேகரித்தார்என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் கைது செய்தனர்.

போப், மாஸ்கோவிலுள்ள லேபோர்ட்டோவா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும்மோசமடைந்தது.

இந்த நிலையில், ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டுள்ள போப்பை விடுவிக்கும்படி அமெரிக்கா, ரஷ்யாவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பிலிப் ரீக் கூறுகையில், போப் ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால்அமெரிக்காவிலிருந்து ரஷ்யா செல்லும் வர்த்தகர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

மேலும், ரஷ்யாவில் வாழும் அமெரிக்கர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். இதனால் உடனடியாக போப்பை விடுவிக்க வேண்டும் என்றார்ரீக்.

முன்னதாக, போப்பின் மனைவி, ஜெயிலுக்குச் சென்று அவரை சந்தித்தார். புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் அவருக்கு மருந்துகளைக் கொடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+