பழமுதிர்ச் சோலையில் சாமி கும்பிட்டார் சிவாஜி
சென்னை:
பழமுதிர்சோலை முருகன் கோயிலில் நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். அவரது மனைவி கமலா பால் காவடி எடுத்தார்.
மதுரை அருகே அழகர்மலையில் பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் உள்ளது. இங்கு புதன் கிழமை காலை குடும்பத்துடன் வந்தார் சிவாஜி. கோவிலுக்குமுன்புள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் சிவாஜி சிதறுகாய் உடைத்தார்.
பின்னர் அழகர்மலையில் உள்ள நுபுர கங்கைக்கு சென்று தீர்த்தம் தெளித்துக் கொண்டார். காலை 6.15 மணிக்கு கமலா பால் காவடியும், சிவாஜி பேரன்குணாளன் சந்தனக் காவடியும் எடுத்து முருகன் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடத்தப்பட்டன. பய பக்தியுடன் சிவாஜி தரிசனம் செய்தார்.
சிவாஜியுடன் மீனாட்சி அம்மன் கோவில் முன்னாள் தக்கார் வி.என்.சிதம்பரம், சிவாஜி மன்ற பொதுச்செயலாளர் முருக விலாஸ் நாகராஜன், பிரபு ரசிகர்மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications