சிறுதொழில்களுக்கு கலால் வரியிலிருந்து ரூ. 1 கோடி வரை விலக்கு
டெல்லி:
சிறுதொழில்கள் நலிவடையாமல் இருக்கவும், அதிகரித்து வரும் போட்டிகளைச் சமாளிக்கவும் அவற்றுக்கான கலால் வரி விலக்கு வரம்பு ரூ. 50லட்சத்திலிருந்து ரூ. 1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற சிறுதொழில்களின் முதல் மாநாட்டை அவர் துவக்கிப் பேசும்போது இதற்கான அறிவிப்பை அவர் வெளயிட்டார்.அவர் மேலும் பேசியதாவது:
பாஜக அரசு பதவியேற்ற பிறகு சிறு தொழில்களுக்கான கலால் வரி விலக்கு வரம்பு இரண்டாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் ரூ. 30 லட்சமாக இருந்த கலால் வரி விலக்கு வரம்பு ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டது. இப்போது இந்த வரம்பு ரூ. 1 கோடியாகஉயர்த்தப்பட்டுள்ளது.
சிறு தொழில்கள் நலிவடையாமல் இருக்கவும், அதிகரித்து வரும் போட்டியைச் சமாளிக்கவும் இந்த கலால் வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் சிறு தொழில்களுக்கான சுங்க வரி விலக்கு வரம்பும் அதிகரிக்கப்படும். அதற்கான அறிவிப்பை நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா விரைவில்வெளியிடுவார்.
இது தவிர சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகங்களும் அந்தந்த தொழிலைப் பலப்படுத்துவதற்கான அறிவிப்புகளை விரைவில் வெளியிடும்.
சிறு தொழில் தொடங்குவதற்கான கடன் தொகையும் ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறு தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களும், சிறு தொழில் துறையினரும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications