புதுக்கோட்டை தொலைபேசி எக்சேஞ்சில் தீ .. ரூ. 1 கோடி சேதம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நிஸாம் காலனியில் புதிதாகத் திறக்கப்பட்ட மின்னணு தொலைபேசித் தொடர்பகத்தில் புதன்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இவ் விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள மின்னணுக் கருவிகள் தீயில் கருகி சேதமடைந்தன. தொலைபேசித் தொடர்பகத்தின் குளிர்சாதனக் கருவியில் ஏற்பட்டமின் கோளாறே இவ் விபத்துக் காரணம் என்று கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்குத் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இவ் விபத்தால் புதுக்கோட்டை நகரில் சுமார் 1800 தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications