ரூ. 7 லட்சத்துடன் கேரள வியாபாரிகள் தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு ஜவுளி வியாபாரிகளிடம் ரூ. 7 லட்சம் பணத்தை கடனாக வாங்கிக் கொண்டுதலைமறைவான கேரள வியாபாரிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு, கைத்தறி, விசைத்தறி துணிகளுக்கு பெயர் பெற்றது. இந்த நகரில் இருந்து பல மாநிலங்களுக்கு கைத்தறிதுணிகள் அதிக அளவில் எடுத்துச் செல்லப்படுகிறது. வியாபார முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரில் வெளிமாநிலத்தினர் பல லட்ச ரூபாய்களை மோசடி செய்து உற்பத்தியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றனர்.

ஈரோடு நகரில் ராமமூர்த்தி என்பவர் கைத்தறி ஆடைகளை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கேரளமாநிலத்தைச் சேர்ந்த சிலர் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். இவர்களிடம் நல்ல வர்த்தகத் தொடர்புஏற்பட்ட பின்னர் நம்பிக்கையின் பேரில் இவர்களுக்கு ரூ. 3.61 லட்ச ரூபாய் வரை ராமமூர்த்தி கடன்அளித்துள்ளார். இவ்வளவு தொகைக்கு கடன் பெற்ற வியாபாரிகள் திடீர் என காணமல் போய்விட்டனர்.அதிர்ச்சியடைந்த வியாபாரி, தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதே போன்று, தங்கராஜ் என்ற வர்த்தகரும் கேரள வியாபாரிகளின் மோசடி வலையில் மாட்டிக் கொண்டுள்ளார்.இவரிடம் வியாபாரிகள் மேற்கொண்ட வர்த்தகத்தில் ரூ. 4.11 லட்ச ரூபாயை பறி கொடுத்துள்ளார்.

இவரும் ஈரோடு குற்றப் புலனாய்வுப் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்க தனி போலீஸ் படையை ஏற்படுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+