வீரப்பனிடமிருந்து இன்னொரு வீடியோ கேசட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து இன்னொரு வீடியோ கேசட் வந்துள்ளது.

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காகஅரசு தூதராக நக்கீரன் கோபால் மூன்றாவது முறையாக காட்டிற்குச் சென்றிருக்கிறார். அவர்வீரப்பனிடம் நடத்திய பேச்சு வார்த்தை குறித்து வீடியோ கேசட் ஒன்று அனுப்பியிருக்கிறார்.

கோபால் வியாழக்கிழமையன்று இந்த கேசட்டை அனுப்பியிருக்கிறார்.

அந்த கேசட்டில் இருக்கும் விவரங்கள் குறித்து நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ்வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

கேசட்டின் ஒரு பகுதியில் ராஜ்குமார் தன்னுடைய உடல் நலம் குறித்து பேசியுள்ளார்.இன்னொரு பகுதியில் தனது கோரிக்கைகளில் பலவற்றை நிறைவேற்ற வேண்டுமென்றவீரப்பனின் வலியுறுத்தல் அடங்கியுள்ளது.

கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கும் தேதியை உடனே அறிவிக்க வேண்டும்என வீரப்பன் கேட்டதற்கு பொங்கலுக்குப் பிறகு திருவள்ளுவர் சிலையை திறக்கலாம்என தமிழக முதல்வர் கூறிய யோசனையை கர்நாடக முதல்வர் ஒப்புக் கொண்டார்என்பதை கோபால் கூறினார்.

ஆனால், இது வானொலியில் அறிவிக்கப்படவில்லை. வானொலியில் அறிவிக்கப்படவேண்டும் என்று வீரப்பன் கூறியுள்ளான்.

கர்நாடக சிறையிலுளள்ள தடா கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் எனபதுவீரப்பனின் மற்றொரு கோரிக்கை ( இந்த கேசட் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வருவதற்குமுன்பு பதிவு செய்யபட்டது). தமிழக சிறையிலுள்ள 5 கைதிகளை உடனே விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வீரப்பன் மீண்டும் வலியுறுத்தியுள்ளான்.

சதாசிவம் கமிஷன் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. எப்போது மீண்டும் விசாரணைதொடங்கும் என வீரப்பன் கேட்டுள்ளான். அதற்கு கோபால் செப்டம்பர் மாதம் 11-ம்தேதி தொடங்கும் என பத்திரிக்கையில் வெளியானதை சுட்டிக் காட்டியதற்கு அதுவும்வானொலியில் அறிவிக்கப்பட வேண்டும் என்றான்.

1991-ம் ஆண்டு நடந்த காவிரி நீர் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கானநிவாரணம் 3 மாதங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பது வீரப்பனின்கோரிக்கைகளுள் ஒன்று. இது குறித்தும் நக்கீரன் ஆசிரியர் கோபால் வீரப்பனுக்குதகுந்த விளக்கங்கள் அளித்துள்ளார்.

இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக கைதிகளை விடுவிக்க முடியாத நிலைஉள்ளது. இது குறித்து வீரப்பனுக்கு விரிவாக எடுத்துக் கூறி ராஜ்குமார் உள்ளிட்டநால்வரையும் அரசு தூதரான எங்கள் ஆசிரியர் மீட்டு வருவார் என காமராஜ்நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+