ராஜ்குமாரை மீட்க உதவும் 2-வது தூதர்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்க நக்கீரன் ஆசிரியர் கோபாலுடன் இன்னொரு தூதரும்அமைதியான முறையில் உதவிக் கொண்டுள்ளார். அவர் - பெங்களூர் அகில இந்தியவானொலி நிலையம்.
ராஜ்குமார் கடத்தப்பட்டு 30 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இத்தனை நாட்களும்ராஜ்குமார் மற்றும் வீரப்பன் கும்பலுக்கும், வெளி உலகுக்கும் இடையிலான தொடர்புவானொலி மூலமே இருந்து வருகிறது.
வீரப்பனுக்கு தினசரி வானொலி கேட்கும் பழக்கம் உள்ளது. இதைப் பயன்படுத்தி,பெங்களூர் வானொலி நிலையம் தினசரி பல செய்திகளை வீரப்பன் கும்பல்கேட்கும்படி ஒலிபரப்பி வருகிறது.
ராஜ்குமார் மனைவி பர்வதம்மாவின் கோரிக்கை, மகன்களது கோரிக்கை, அரசுகளின்அறிவிப்புகள், ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பான லேட்டஸ்ட் செய்திகளைபெங்களூர் வானொலி நிலையம் தனது ஸ்பாந்தனா நிகழ்ச்சி மூலம் அடிக்கடிஒலிபரப்பி வருகிறது.
ராஜ்குமார் உடல் நிலை குறித்த தகவல்களையும் ஸ்பாந்தனா வீரப்பன் கும்பலுக்குஅடிக்கடி நினைவூட்டி வருகிறது. ராஜ்குமாருக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகள்குறித்து அது அடிக்கடி கூறி வருகிறது.
வீரப்பனுடன் கோபால் எளிதில் பேச முடிகிறதோ இல்லையே, பெங்களூர் வானொலிநிலையம் தொடர்ந்து தடையின்றி செய்திப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறது.
பெங்களூர் வானொலி இப்படி மத்தியஸ்தத்தில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல.1997-ம் ஆண்டு விஞ்ஞானி மைத்தி, போட்டோகிராபர் கிருபாகர், சேனானிஆகியோர் கடத்தப்பட்டபோதும், பெங்களூர் வானொலி மூலம் பல தகவல்கள்,வீரப்பனுக்குத் தெரிவிக்கப்பட்டன.
வானொலி நிலைய இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், விஞ்ஞானி மைத்தியின்மனைவி விடுத்த உருக்கமான கோரிக்கைகள் அடிக்கடி வானொலியில்ஒலிபரப்பப்பட்டன. சூரியன் மட்டுமே எளிதில் ஊடுறுவக் கூடிய காட்டுக்குள் அகிலஇந்திய வானொலியால் செல்ல முடியும் என்பதை இது நிரூபித்தது.
வீரப்பன் தொடர்ந்து வானொலி கேட்கும் பழக்கம் உள்ளவன் என்பதை அறிந்ததும்,வானொலி மூலம் கடத்தப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரலாம் என்றமுடிவுக்கு வந்தோம் என்றார்.
தற்போதயை கடத்தலிலும் வானொலி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ராஜ்குமாரைபார்த்து விட்டுத் திரும்பிய கோபாலின் பேட்டி ஒலிபரப்பப்பட்டது. அதில் ராஜ்குமார்எப்படி இருக்கிறார், அவரது உடல் நிலை குறித்து கோபால் விளக்கினார். ராஜ்குமாரை,வீரப்பன் நல்லபடியாக வைத்திருக்கிறான் என்றும் தனது பேட்டியில் கோபால்விளக்கினார்.
கர்நாடகத்தின் முதல் வானொலி நிலையம் மைசூரில் 1935-ம் ஆண்டுதுவக்கப்பட்டது. அப்போது இது தனியாரிடம் இருந்தது. இந்த வானொலி நிலையத்தில்இருந்த டிரான்ஸ்மிட்டர்தான் தற்போது, இலங்கை வானொலி நிலையத்தில் உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் வானொலி நிலையம் 1955-ம் ஆண்டு உருவானது. பெங்களூரிலிருந்து 50கிலோமீட்டர் தொலைவிலுள்ள தொட்டபல்லபூர் என்ற இடத்தில் வானொலிநிலையத்தின் ஒலிபரப்பு நிலையம்உள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications