அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் ... எம்.பி.சுப்ரமணியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரான எம்.பி. சுப்ரமணியம், தற்பொழுது கடிதம்எழுதி, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சோனியாவின் தூதர்களாக ராம் நிவாஸ் மித்ரா, இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல்அதிகாரி சங்கர நாராயணன் ஆகியோர் வியாழக்கிழமையன்று சென்னைவந்திருந்தனர்.

அவர்களிடம் தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் எம்.பி.சுப்ரமணியம் கடிதம்ஒன்றை கொடுத்தார். அந்தக் கடிதத்தில்,

ஜெயலலிதாவும், அவரது கட்சியினரும் காங்கிரஸ் கட்சியையும், தலைமையையும்தூக்கியெறிந்து பேசி வருகின்றனர்.

நன்றி விசுவாசம், அரசியல் நாகரிகம் இவை, அவர்கள் படித்த அரசியல் அகராதியில்இல்லாதது போல் தெரிகிறது. ராஜீவ் காந்தி கொலையில் மூப்பனாருக்கும் பங்கு உண்டுஎன்று ஜெயலலிதா பொதுக் கூட்டத்தில் பேசினார்.

ஆனால் 1999 தேர்தலுக்குப் பின் மூப்பனார் வீடு தேடிப் போனார். தாங்கள்தேர்தலுக்கு முன்பே எங்களுடன் இருந்திருந்தால் தமிழகத்தின் வரலாற்றைமாற்றியிருக்கலாம் என்றார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக சோனியா காந்தி விழப்புரம் வந்திரூந்தார். அந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய ஜெயலலிதா சோனியா காந்தியை ஒரு மணிநேரம் காக்க வைத்து அவமரியாதைப் படுத்தினார். அப்படியிருந்தும் கூட்டத்திற்குவரவில்லை.

இந்த அவமானங்கள் தொடர வேண்டுமா? என்று பல பழைய சம்பவங்களை சுட்டிக்காட்டி எழுதியவர் இறுதியில், நீங்களே எங்களை விட்டு வெளியேறுகிறீர்களா அல்லதுநாங்களே உங்களை வெளியேற்றவா என காங்கிரஸ் கட்சியைப் பார்த்து அ.தி.மு.க.கேள்வி காட்டவில்லை , செயலில் காட்டுகிறது

உதைக்கும் கால்களுக்கு முத்தமிடுபவன் முட்டாள். தன்மானம் உடைய எவனும்இதைச் செய்ய மாட்டான். மேலும் அ.தி.மு.க. வுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால்,தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தேவையில்லாத கட்சி என்றாகி விடும் என்றுஎழுதியிருந்தார் எம்.பி. சுப்ரமணியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+