கோபத்தின் உச்சியில் வீரப்பன்?
சென்னை:
தமிழக, கர்நாடக அரசுகள் தன்னை ஏமாற்றுவதாக சந்தனக் கடத்தல் வீரப்பன்கோபமாக இருப்பதாகத் தெரிகிறது.
வீரப்பன் விவகாரத்தில், லேட்டஸ்ட் நிலவரம் குறித்து டென்ஷனாக இருக்கிறார்கள்தமிழக காவல்துறை அதிகாரிகள். மூன்றாவது முறையாக, ராஜ்குமாரை மீட்பதற்காககாட்டிற்குச் சென்ற கோபால், இன்னமும் வீரப்பனுடன் தொடர்ந்து பேச்சுவார்ததையிலேயே இருக்கிறார் என்கிறார்கள்.
கர்நாடக சிறையில் உள்ள 51 பேரையும் சேர்த்து 121 பேர் மீதுள்ள வழக்குகளைகர்நாடக அரசு வாபஸ் பெற்று அனைவரையும் விடுதலை செய்தது. இந்த நிலையில்,தமிழ் தீவிரவாதிகள் ஐந்து பேர் விடுதலை தாமதமானது பற்றி மிகவும்கோபமடைந்திருக்கிறான் வீரப்பன்.
நக்கீரன் கோபாலிடம் பேசிய வீரப்பனின் ஆட்கள், தலைவர் (வீரப்பன்) மிகவும்கோபத்தோடு இருக்கார். ஒண்ணும் தெரியாத அப்பாவிகளை எல்லாம் புடிச்சிக்கிட்டுபோயிட்டாங்க.
கடந்த முறை 9 பேரை கடத்தினப்பவே அவங்களை எல்லாம் விடுதலை செய்யச்சொன்னேன். செய்யலை. இப்ப, ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்ன்னு இழுத்தடிக்கிறாங்க.அப்படின்னு தலைவர் சத்தம் போட்டுகிட்டு இருக்கிறார் என்று ஆவேசப்பட்டார்கள்வீரப்பனின் ஆட்கள்.
மேலும், தற்பொழுதைய அரசின் செயல்பாடுகள் குறித்தும் கடும்கோபமடைந்திருப்பதாகவே சொல்கிறார்கள். காட்டில் உள்ள கருத்துக்கள் இப்படிஇருக்கிறதாம். மக்களுக்காகத்தானே கோர்ட் இருக்கு. அப்பாவி மக்களை விடுதலைபண்ணச் சொல்லி உத்தரவு போடாமல் இந்தக் கோர்ட் ஏன் தடை விதிக்கிறது என்றுஆத்திரப்படுகிறானாம் வீரப்பன்.
அரசாங்கம், கோர்ட் என்னவோ செய்யட்டும். இந்தக் காடுதான் கோர்ட். என்மனசாட்சி சொல்றதுதான் தீர்ப்பு. 121 கைதிங்க, தமிழ்நாட்டுல 5 பேர் விடுதலைசெய்யப்படலைன்னா என்கிட்ட கைதியா இருக்கிறவங்களுக்கு என்ன தீர்ப்புகொடுக்கப் போகிறேன்னு நீங்க எல்லாரும் பார்க்கத்தானே போறீங்க என்றுகோபமாகவே கர்ஜித்தானாம் வீரப்பன்.
அதிரடிப்படையால கற்பழிக்கப்பட்டவங்க யார், யார்ன்னு அரசுக்குத்தான் தெரியுமே?அவங்களுக்கெல்லாம் ஆளுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டியதுதானே.மறுபடியும் விசாரணையாம், கோர்ட்டாம் விளையாட்டா காட்டறீங்க. விடமாட்டேன்யாரையும் என்று கர்ஜிக்கிறானாம்.
நானும் காட்டுக்குள்ள சும்மா இல்லை. ரேடியோ நியூஸ் கேட்டேன். தடா கைதிகளைவிடுவிக்க அரசுக்கு விருப்பமில்லை என்றவன் கோபாலைப் பார்த்து நான் ஏற்கனவேசொன்னேன். நீ குழப்பி விட்டுட்டே. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குஎல்லாருக்கும் நிவாரணம் கொடுக்கலை.
121 மற்றும் 5 தமிழ் தீவிரவாதிகளை இந்தக் கையில கொடுத்துட்டு அந்தக் கையிலபணயக் கைதிகள வாங்கிட்டுப் போங்க என்று ஆவேசமாகச் சொல்கிறானாம்வீரப்பன்.












Click it and Unblock the Notifications