செளத்ரிக்கு ஐரோப்பிய யூனியனில் வரவேற்பு
பிரஸ்ஸல்ஸ்:
பிஜியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர செளத்ரிபேசிய பேச்சுக்கு ஐரோப்பிய யூனியனில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிஜியில் பிரதமராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர செளத்ரி, புரட்சிமூலம் கவிழ்க்கப்பட்டார். பல வார சிறைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு பல உலக நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிஜியில் மீண்டும்தனது தலைமையிலான அரசு அமைய ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்தியா உள்பட பல நாடுகளுக்குச் சென்றவர், தற்போது பிரஸ்ஸல்ஸ் சென்றுள்ளார்.ஐரோப்பிய யூனியனின் தலைமை சபையில் அவர் உரை நிகழ்த்தினார்.
அப்போது செளத்ரி பேசுகையில், பிஜியில் என்ன நடந்தது, நடக்கிறது என்பதைஐரோப்பிய யூனியனுக்கும், ஆப்பிரிக்க, கரீபிய, பசிபிக் செயலகத்திற்கும் புரியவைக்கவே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன் என்றார் செளத்ரி.
ஐரோப்பிய யூனியனில் பேசிய செளத்ரியின் பேச்சுக்கு உறுப்பினர்களிடையே நல்லவரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications