போலீசே கரைத்த பிள்ளையார் சிலைகள்
திண்டுக்கல்:
மிக உற்சாகமாக கொண்டாட வேண்டிய விழா எல்லாம், ஒவ்வொரு முறையும்பிரச்சனையாகிக் கொண்டிருக்கின்றன.
பிள்ளையார் சதுர்த்தி என்றாலே தமிழக காவல்துறை தலையைப் பிய்த்துக் கொள்ளும்.எந்த அரசு இருந்தாலும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் என்பது வருடாவருடம்ரகளையில்தான் முடிகிறது.
இந்த முறை. திண்டுக்கல்லில் கலவரச் சூழல்! அங்கு சனிக்கிழமை விநாயகர் சதுர்த்திஊர்வலம் நடந்தது. பாரைப்பட்டியில் இருந்து எட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாககொண்டு செல்லப்பட்டன.
பேகம்பூர் பள்ளிவாசல் வழியாக செல்லக் கூடாது என்று போலீசார் தடைவிதித்திருந்தனர். வழக்கம் போல, விநாயகர் ஊர்வலம் பள்ளிவாசல் ஏரியாவுக்கு வர,போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்து முன்னணியினர் அப்படித்தான் செல்வோம் என்று பிடிவாதம் பிடித்தனர்.இதனால் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். மறுபடியும் இரண்டாவதுகட்டமாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதுவும் தோல்வியில் முடிய திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சத்யமூர்த்தி இந்துமுன்னணியினரை ஒதுங்கச் சொல்லி போலீசாரே, விநாயகர் சிலைகைள கரைக்கட்டும்என்று முடிவு சொன்னார். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக சிலைகளை போலீசார் இழுக்க அதை தடுத்தஇந்து முன்னணியினர் 19பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன்போலீசாரே எட்டு பிள்ளையார் சிலைகளையும் கோட்டைக் குளத்திற்கு எடுத்துச்சென்று கரைத்தனர்.
இன்னும் சில நாட்களில் சென்னை உட்பட பல நகரங்களில் விநாயகர் ஊர்வலங்கள்நடக்க இருக்கின்றன. இங்கேயும் அமைதியாக ஊர்வலம் நடந்து முடியுமா? அல்லதுபோலீசார் தான் விநாயகர் சிலைகைளை கரைக்கப் போகிறார்களா? என்பதைபயத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள் (விநாயகரும்தான்!).
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications