31 ஆண்டுகளுக்குப் பிறகு...இங்கிலாந்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி
லண்டன்:
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று இங்கிலாந்துசாதனை படைத்துள்ளது. 31 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து இச் சாதனையைப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் 158 ரன்கள்வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை இங்கிலாந்து தோற்கடித்தது.
இதன் மூலம் 5 டெஸ்டுகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்துவென்று சாதனை படைத்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கடைசியாக 1969-ம் ஆண்டுதான் டெஸ்ட்தொடரை இங்கிலாந்து வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே 4 டெஸ்ட்டுகள் முடிந்த நிலையில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில்முன்னிலையில் இருந்தது. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது.
தொடரைச் சமன் செய்ய 5-வது மற்றும் கடைசியான ஓவல் டெஸ்டை வென்றாகவேண்டிய இக்கட்டான நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் இருந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 258 ரன்களுக்குஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 125 ரன்களுக்குஆட்டமிழந்தது.
இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தது. இதையடுத்து374 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தனது இரண்டாவதுஇன்னிங்ஸை மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடங்கியது.
ஆனால், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 215ரன்களுக்கு தனது இன்னிங்ஸை மேற்கிந்தியத் தீவுகள் இழந்தது. லாரா மட்டும் ஓரளவுநின்று ஆடி 47 ரன்கள் எடுத்தார்.
தனது கடைசி டெஸ்டை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் 28 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 158 ரன்கள் வித்தியாசத்தில் டெஸ்டை மட்டுமல்ல தொடரையும் 3-1என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது.
இங்கிலாந்து அணியில் காட்டிக் 4 விக்கெட்டுகளையும், டேரன் கோ 3விக்கெட்டுகளையும், கார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகராக முதல் இன்னிங்ஸில் சதமடித்த இங்கிலாந்து வீரர் மைக்கேல்ஆர்தர்டன் தேர்வு செய்யப்பட்டார்.
இத் தொடரின் சிறந்த ஆட்டக்காரர்களாக இங்கிலாந்தின் டேரன் கோவும்,மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளர் கார்ட்னி வால்ஷும் தேர்வுசெய்யப்பட்டனர்.
-
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications