மின்சாரம் தாக்கி நான்கு பேர் பலி
சென்னை:
சென்னை அருகே மின்சாரம் தாக்கி நான்கு பேர் இறந்தனர்.
சென்னையை அடுத்துள்ள சூரப்பட்டு என்ற பகுதியில், ஒரு தனியார் கல்லூரி இருக்கிறது. கல்லூரியின் பின்புறத்தில் பெரிய காலி மைதானம் உள்ளது.
இந்தப்பகுதியில் மின் கம்பங்கள் நடப்பட்டு விளக்கு பொருத்தும் பணி நடந்து வந்தது. மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இதற்கானகாண்டிராக்டை எடுத்திருந்தார்.
அவர் கம்பெனியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன்கள் கணேசன், கண்ணன் ஆகிய இருவரும் அங்குள்ள மின் கம்பங்களில் விளக்குகளை பொருத்தும் பணியில்ஈடுபட்டனர்.
பெரிய டிராலி ஒன்றில் அமர்ந்தபடி அவர்கள் இந்த பணியைச் செய்தனர். டிராலியை தொப்புளான் , ராஜேந்திரன் ஆகிய கூலித் தொழிலாளர்கள் தள்ளிச்சென்றனர்.
செவ்வாய்கிழமை மதியம் 12 மணியளவில் அவர்கள் டிராலியை தள்ளிக் கொண்டு சென்ற பொழுது அது எதிர்பாராத விதமாக அங்குள்ள மின் கம்பியில்உரசியது.
அடுத்த விநாடி டிராலி முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. டிராலியில் இருந்த கணேசன், கண்ணன் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டனர்.தொப்புளான், ராஜேந்திரன் மீதும் மின்சாரம் பாய்ந்தது அவர்கள் நான்குபேரும் பிணமானார்கள்.
பலியான நான்கு பேரும் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் அம்பத்தூரில் இருந்துபோலீஸாரும்,தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications