வீரப்பனுக்கு தடா கைதிகளின் வக்கீல் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 தமிழ் தடா கைதிகளை விடுவிக்கவே போராடி வருகிறேன். எனவே நடிகர் ராஜ்குமார் மற்றும் பிறரைஉடனடியாக விடுவிக்குமாறு கைதிகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடி வரும் வழக்கறிஞர் வேணுகோபால் வானொலி மூலம் வீரப்பனுக்குவேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமென்றால் 51 தமிழ் தடா கைதிகள் மற்றும் 5 தமிழ் தீவிரவாதிகளை விடுவித்தே ஆக வேண்டும் என்று வீரப்பன்பிடிவாதமாகக் கூறியுள்ளான். அவனை சமாதானப்படுத்தச் சென்ற நக்கீரன் கோபால் வெறும் கையுடன் திரும்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் அகில இந்திய வானொலி மூலம், 51 தடா கைதிகளுக்காக ஆஜராகி வரும் வழக்கறிஞர் வேணுகோபால் வீரப்பனுக்குவேண்டுகோள் விடுத்துள்ளார்.

வியாழக்கிழமை ஒலிபரப்பாகிய வானொலி செய்தியில் நீங்களும் தடா கைதிகளின் விடுதலைக்காக போராடி வருகிறீர்கள். நானும் அதேநோக்கத்திற்காகவே முயற்சி மேற்கொண்டு வருகிறேன். வழக்கறிஞர் என்ற முறையில் எனக்கே பெரிய சிரமமாக இருக்கிறது. இவர்களைவிடுவிப்பது சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது.

தமிழக, கர்நாடக அரசுகள் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளன. ஆயினும் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டதால்இவர்களது விடுதலை தாமதமாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து அவர்களை விடுவிக்க முயற்சி நடந்து வருகிறது.

நடிகர் ராஜ்குமாருக்கு 65 வயதுக்கு மேலாகிறது. அவருக்கு உடல்நலம் சரியில்லை. இதைக் கருத்தில் கொண்டு உடனடியாக ராஜ்குமாரை நீங்கள்விடுவிக்க வேண்டும்.

உங்களது கோரிக்கைளுக்காகவே நானும், இரு மாநில அரசுகளும் முயற்சித்து வருகிறோம். எனவே நடிகர் ராஜ்குமாரை இனியும் காட்டுக்குள்வைத்திருக்காது விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று வேணுகோபால் கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+