ஐ.நா.வில் மாற்றம் கோருகிறார்கள் உலகத் தலைவர்கள்
நியூயார்க்:
ஐக்கிய நாடுகள் சபையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஐ.நா. மில்லனியம்மாநாட்டில் பேசிய பல உலகத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. சபையின் மில்லனியம் மாநாடு நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமைஅலுவலகத்தில் புதன்கிழமை துவங்கியது. மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில்உலகத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டின் துவக்க தினத்தில், பேசிய பல உலகத் தலைவர்கள், உலகமயமாக்கல்,வளரும் நாடுகளின் பிரச்சினைகள், சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பது ஆகியவைகுறித்துப் பேசினர்.
ரஷிய அதிபர் விலாடிமிர் புடின் பேசுகையில், ஐ.நா. செயல்பாடுகளை சீரமைக்கவேண்டும். முழுவதும் மாற்றியமைக்க வேண்டும். நடைமுறைகளை மாற்றுவதன்மூலம், ஐ.நா.வின் அடிப்படை கொள்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படப் போவதில்லை.மாற்றங்களுக்கு இதுவே சரியான நேரம்.
ரஷியா சந்தித்து வரும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை பல நாடுகளும்சந்தித்து வருகின்றன. எனவே இதுபோன்ற பொதுவான பிரச்சினைகளை சந்திக்கஅனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் பேசுகையில், உலகம் முழுவதும் நடந்து வரும்உள்நாட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டு நிரந்தர அமைதி காக்கும் பணிகளைஐ.நா. மேற்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பான ஆய்வுப் பணிகள், தேவையான புள்ளிவிவர சேகரிப்பு உள்படதற்போதைய நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசுகையில், காலத்திற்கேற்றபடி ஐ.நா.வும் மாறவேண்டும். கடந்த காலத் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டு, புதியநடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்றார் ஹசீனா. வங்காளமொழியில் ஹசீனா பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வாஜ்பாய், வெள்ளிக்கிழமை ஐ.நா.வில் உரையாற்றுகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications