செச்னியா சென்றார் பின்லேடன்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
ஆப்கானிஸ்தான் தீவிரவாதி ஒசாமா பின்லேடன், ரஷ்யாவில் தனிநாடு கேட்டு போராடி வரும் செச்னிய படைகளுக்குத் தலைமை தாங்கி வழி நடத்தும்வகையில் செசனியாவிற்கு இடம்பெயரத் திட்டமிட்டுள்ளார்
இதை ரஷ்ய ராணுவ துணை தளபதி வெலேரி மனிலோவ் இதை உறுதிப்படுத்தியுள்ளார். ரஷிய செய்தி நிறுவனமான நவோஸ்திக்கு அவர் அளித்த பேட்டியில்,ரஷ்யாவில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் பின்லேடன் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார்.
இதுவரை, செச்னியாவில் கட்டாப் தலைமையில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகள், உள்ளூர் செச்னியர்களை வைத்து சண்டையிட்டு வந்தனர். தற்போதுஅவர்களைக் குறைத்து விட்டு அரேபிய மற்றும் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகளை அதிகம் சேர்த்துள்ளனர். அவர்கள் மூலம் ரஷ்யபடைகளுடன் மோதி வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications