ஜெ. தலைமையில் பெரியார் விழாவா?..கருணாநிதி கண்டனம்
போலீஸ் அதிகாரிகள் கொலை வழக்கில், தடா சட்டத்தின் கீழ், கைதாகி, கர்நாடக மாநில சிறையில் உள்ள சுமார் 30கைதிகளை - வீரப்பனின் நிபந்தனையை ஏற்று விடுவிப்பதற்கு - கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்திருக்கிறது.
கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகளில் ஒருவரின் தந்தை செய்த மனுவின் மீது, சுப்ரீன் கோர்ட்டின் இந்த உத்திரவுவந்திருக்கிறது. அதாவது - வீரப்பனின் பல நிபந்தனைகளில் ஒன்றான இந்த கிரிமினல் பேர்வழிகளின் விடுதலை,இப்போதைக்கு நடக்காது.
அத்துடன் சுப்ரீம் கோர்ட் சில கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறது.... எட்டு நீண்ட வருடங்களாக வீரப்பனைப்பிடிக்காத கர்நாடக அரசு தனது அக்கறையின்மையை , இன்னமும் கடுமையாக்குகிற வகையில், இப்போது கூட்டாளிகள் விடுதலை என்ற அவனுடைய நிபந்தனைக்கு அடிபணிகிறது.
இப்போதைய கர்நாடக அரசு வெளியேறி, வீரப்பன் மீது சரியான நடவடிக்கை எடுக்கக் கூடிய ஓர் அரசுஅமைவதற்கு வழி செய்ய வேண்டும்... கடந்த எட்டு ஆண்டு காலமாக நீங்கள் என்ன செய்தீர்கள்? மக்களுக்குஎன்ன பாதுகாப்பு அளித்தீர்கள்.? இப்போது வந்து, ஒன்றும் செய்ய முடியாத நிலை என்று கூறுகிறீர்களே?முடியாதென்றால் வெளியேறி செயலாற்றக் கூடியவருக்கு வழிவிடுங்கள் - இந்த விவகாரத்தினால் சட்டம் ஒழுங்குபிரச்சனை ஏற்படும் என்றால், அதை சமாளிக்க வேண்டியது கர்நாடக அரசின் பொறுப்பு ... என்றெல்லாம்நீதிமன்றம் கூறியிருக்கிறது.
கர்நாடக அரசுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்; வீரப்பனைப் பிடிக்க வக்கிலாதவர்கள், அவனுக்குஅடிபணிந்து கிரிமினல்களை விடுவிக்க முயன்றதுக்கு சரியான பாடம்.
நீதிமன்றம் கொடுத்துள்ள டோஸ் முற்றிலும் நியாயமானதே ... என்ற எண்ணம்தான் பலருக்கு எடுத்தஎடுப்பிலேயே வரும்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!