கருணாநிதியிடம் ராஜ்குமார் ரசிகர்கள் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை விரைவில் விடுவிப்பதற்கு முழு முயற்சியையும் எடுக்க வேண்டும் என்று கோரி ராஜ்குமார்ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் சென்னைக்குச் சென்று தமிழக முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ராஜ்குமார் ரசிகர்கள் வியாழக்கிழமை சென்னை வந்து முதல்வர் கருணாநிதியின் செயலாளரைச் சந்தித்துப்பேசினர். முதல்வரிடம் கொடுக்கும்படி அவரிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
மனுவில், கர்நாடகாவில் வாழும் 5 கோடி மக்கள் மனதில் குடியிருக்கும் நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச்சென்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே நடிகர்ராஜ்குமாரை மீட்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications