மத்திய அரசு தலையிடுகிறது
டெல்லி:
நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக கர்நாடக அரசு அதிகாரிகளுடன்பேசுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பெங்களூர்வருகிறார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக இதுவரை மத்திய அரசுநேரடியாக தலையிடவில்லை. இருப்பினும் தொடர்ந்து இந்த விவகாரத்தை மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி கவனித்து வருகிறார். ஏற்கனவே, கடத்தலை அவர்கண்டித்துள்ளார்.
இரு மாநில அரசுகளுடனும், மத்திய அரசு தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளது. நக்கீரன்கோபாலை தூதராக அனுப்பியது சரியானதுதான் என்றும் மத்தியஅரசு கருத்துத்தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், ராஜ்குமாரைவிடுவிக்க இரு மாநில அரசுகளும் கேட்டுக் கொண்டால், ராணுவத்தை அனுப்பத்தயார் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தனஞ்செயகுமார் கூறினார்.
தற்போது, இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆலோசனைகள் கூறுவதற்காகமத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் பெங்களூர் வரவிருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications