ஓணத்தை வரவேற்கத் தயாராகிறது கேரளா
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையை வரவேற்க கேரள மக்கள் தயாராகி வருகிறார்கள்.
10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் உச்சகட்டமான திருவோணம், ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. வயது வித்தியாசம்இல்லாம, ஜாதி மத பாகுபாடு இல்லாமல் கேரள மக்கள் அனைவராலும் ஓணம் கொண்டாடப்படுவது அதன் சிறப்பை வெளிக்காட்டுகிறது.
ஓணத்தின் அடையாளமான பூக்கோலம் ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமாகும். கேரள மாநிலத்தின் கிராமப்புற வீடுகளில் பூக்கோலங்கள்அமர்க்களப்படுகின்றன. பல வண்ண மலர்களால் அமைந்துள்ள இந்த பூக்கோலங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளன.












Click it and Unblock the Notifications