பாதுகாப்பு கோரி மைசூரில் தமிழர்கள் பேரணி
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை விரைவில் விடுவிக்கக் கோரியும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் வெள்ளிக்கிழமை மைசூரில்பேரணி நடக்கிறது.
இதுதொடர்பாக கர்நாடக தமிழர் சங்க தலைவர் ரா.சு.மாறன் விடுத்துள்ள அறிக்கை:
ராஜ்குமார் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மைசூரில் தமிழர் அமைப்புக்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளன. வெள்ளிக்கிழமைகாலை 10 மணிக்கு மைசூர் அரண்மனை முன் இந்தப் பேரணி துவங்கும்.
மைசூர், சாம்ராஜ்நகர், குண்டல்பேட்டை, கொள்ளேகால், அனூர், தொள்ளிபுரம், ஹெக்கடதேவன கோட்டை, மண்டியா, நஞ்சன்கூடு தமிழ் சங்கங்களைச்சேர்ந்தவர்கள் பேரணியில் பங்கேற்கின்றனர்.
நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ராஜ்குமாரை மீட்பதில் தமிழக, கர்நாடக அரசுகள் எடுக்கும்அனைத்து முயற்சிகளுக்கும் இங்கு வாழும் தமிழர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பதை வெளிப்படுத்தவும், கர்நாடக தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரியும், கர்நாடக தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து தமிழர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரில் பிரார்த்தனை:
ராஜ்குமார் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவாஜிநகர் புனித மேரி பசிலிக்கா ஆலயத்தில் வெள்ளிக்கிழமை சிறப்புப்பிரார்த்தனை நடக்கிறது.
தமிழர் சங்க பொதுச்செயலாளர் ஸ்ரீதரன், கருணாநிதி, கோபிநாத், சரவணன், பரணிக்குமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications