சங்கரன்கோவிலில் பெண் அகதி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இலங்கை அகதிகள் முகாமில் அகதிப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
நடத்தை குறித்து கணவர் சந்தேகப்பட்டதால் அப்பெண் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்சிவக்குமார். கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அல்லி.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சென்ற அல்லி அங்கிருந்து வேறு ஒருநாட்டுக்குச் சென்று வேலை பார்த்தார். தற்போது டூரிஸ்ட் விசாவில் சங்கரன்கோவில்வந்திருந்தார்.
வந்த இடத்தில் அவருக்கும், கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முகாமில்இருந்த ஒருவருடன், அல்லியை இணைத்து அவரது கணவர் பேசியுள்ளதாகத்தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அல்லி தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications