பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த முன்னாள் ராணுவ வீரர் கைது

Subscribe to Oneindia Tamil

லக்னோ:

பாகிஸ்தான் நாட்டிற்கு ராணுவ ரகசியங்களை விற்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரரை உ.த்தரபிரதேச போலீஸார் கைதுசெய்தனர்.

சிறப்பு அதிரடிப்படை தலைமை போலீஸ் கண்காணிப்பாளர் அருண் குமார் இதுகுறித்துக் கூறுகையில்,உத்தரப்பிரதேச போலீஸார், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.ஏஜன்டுகளுக்கு ரகசிய தஸ்தாவேஜூகளைக் கொடுத்ததுதொடர்பாக, முன்னாள் ராணுவ வீரர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ண நாயர் ஆர்மி சர்வீஸஸ் கார்ப்ஸ் பிரிவில் ஹவில்தாராகப் பணியாற்றி வந்தவர்.கேரளாவைச் சேர்ந்தவர்.

கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு சொல்லும் ஐந்து ஏஜன்டுகளைக் கைதுசெய்தோம். அவர்களில் இருவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள். மேலும் இருவர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட ஏஜன்ட்டுகளுக்கு ராணுவ தகவல்கள் மற்றும் ரகசிய தஸ்தாவேஜூகளைக் கொடுத்ததுதொடர்பாக ராமகிருஷ்ண நாயரை தற்போது கைது செய்துள்ளோம் என்றார் அருண்குமார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+