சாலை மறியல் செய்த 200 தொலைபேசி ஊழியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பாரிமுனையில், பஸ் மறியலில் ஈடுபட முயன்ற தொலைபேசித் துறைஊழியர்கள் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தொலைபேசி துறையை தனியார் மயமாக்கமாற்ற முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெலிபோன் ஊழியர்கள் கடந்த மூன்றுநாட்களாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே தமிழகம்முழுவதும் அறிவிக்கப்படாத டெலிபோன் துண்டிப்பு அமலுக்கு வந்தது.
சென்னை பாரிமுனையில், சுமார் 200-க்கும் மேம்பட்ட ஊழியர்கள், திரண்டனர்.மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போக்குவரத்து முழுவதுமாகபாதிக்கப்பட்டது.ஊழியர்கள் தொடர்ந்து சாலை மறியலில், ஈடுபட முயன்றனர்.இதனால், அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தொலைபேசி ஊழியர்களில் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications