ரயில்களில் தொடரும் மயக்க பிஸ்கட் கொள்ளைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அறிமுகம் இல்லாதவர்கள் கொடுக்கின்ற உணவுப் பொருட்களை வாங்கித் திண்ணாதீர்கள். இந்த விளம்பரங்கள்சென்னையின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

தியேட்டர்களில், ரயிலில், நடைபாதையில் என்று பல இடங்களில் இந்த எச்சரிக்கைகள் ஒட்டப்பட்டுள்ள.ரயிலிலோ, பஸ்ஸிலோ அறிமுகமில்லாதவர்கள் அருகில் இருப்பவர்களிடம் அன்பாகப் பேச்சைத்தொடங்குவார்கள். பின்னர் இந்தாங்க பிஸ்கட், சாக்லேட் என்று கனிவாக பேசி கொடுப்பார்கள்.

வாங்கித் திண்பவர் சில நிமிடங்களில் மயக்கமாகி விடுவார். அவ்வளவுதான் அடுத்த நிமிடம், அருகில் உள்ளநபரிடமிருந்து பொருட்கள், பணம் என்று அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி விடுவார்கள்.

இம் மாதிரியான அன்பு கலந்த கிரைம்கள் சமீபகாலமாக சென்னை மாநகர குற்றப் புள்ளிவிபரத்தைஅதிகப்படுத்திக்கொண்டு செல்கிறது.

இந்த வகையான கிரைம்ங்கள் குறிப்பாக எலக்ட்ரிக் டிரெய்ன்களில் தான் அதிகமாக நடந்து வருகிறது. லேட்டஸ்ட்சம்பவம் இதோ:

மும்பையில் இருந்து சென்னை வரும் மும்பை மெயில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு சென்ட்ரல்ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டனர்.

காலை 8 மணியளவில் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் பெட்டிகளுக்குள் சென்றபோது,இரண்டாம் வகுப்பு பெட்டியில் 4 பேர் மயங்கிய நிலையில் இருந்தனர்.

அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தனர் ரயில்வேபோலீஸார். உடனே சென்னை அரசு மருத்துவமனையில் நால்வரையும் சேர்த்தனர்.

மருத்துவச் சிகிச்சைக்குப்பிறகு நான்கு ( சிவசங்கரன், மோகன்லால், எட்விஸ், அசோக்ஜெயின்) பேரிடமும்போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில் சிவசங்கரன் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் போலீஸ்காராக இருக்கிறார். இவர் வழக்குவிசாரணைக்காக மும்பை சென்றிருந்தார். இந்த நான்கு பேரிடமும் இருந்த நகைகள், பணம் ஆகியவைகொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

ஆந்திர மாநிலம் வாடி அருகே ரயிலில் ஏறிய சில திருடர்கள் இந்த நால்வரிடமும் மயக்க பிஸ்கட் கொடுத்துகொள்ளையடித்துள்ளனர்.

இது மாதிரி நிறைய சம்பவங்கள் நடந்து வருகின்றன. மக்களை விழிப்புணர்வோடு இருக்கச்சொல்லி அனைத்துஇடங்களிலும் விளம்பரங்கள் செய்கிறோம். ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரை, ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்என்கிற பழமொழி தான் இங்கேயும் பொருந்தும். நாங்களும் முயற்சி எடுத்து எவ்வளவோ செய்கிறோம்.ஆனாலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என்கிறார்கள் ரயில்வே காவல்துறை அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+