ஜெ. தலைமையில் பெரியார் விழாவா?..கருணாநிதி கண்டனம்
சென்னை:
தகுதியே இல்லாத ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க.வினர் பெரியார் விழாகொண்டாடுவது உலகின் 9-வது அதிசயம் என்று தமிழக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
ராஜ்யசபா அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்ட முன்னாள்அ.தி.மு..க. செயலாளர் ஆறுமுக நாயினார் தலைமையில் 1000-க்கும் மேற்பட்டஅ.தி.மு.க.வினர் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது கருணாநிதி பேசுகையில், தி.க.விலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று நன்குவேரூண்றியுள்ள கட்சி தி.மு.க. இந்தக் கட்சியில் சேர 3 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் தூத்துக்குடியிலிருந்து வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.அனைவரையும் வரவேற்கிறேன்.
உங்களுக்கும் தி.மு.க. தொண்டர்களுக்கும் இடையே பல கசப்பான சம்பவங்கள்நடந்திருக்கலாம். அவற்றையெல்லாம் மறந்து நாம் இனி ஒன்றாக செயல்படுவோம்.
அதிமுக சார்பில் பெரியார் விழா கொண்டாடப்பட உள்ளது என செய்திகளவந்துள்ளன. அதற்குத் தலைமை ஜெயலலிதா என்றும் கூறுகிறார்கள். பெரியார் விழாகொண்டாட வேண்டுமென்றால் அவரது கொள்கைகள் மற்றும் லட்சியங்களைஅடிப்படையளவிலாது ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அண்ணா விழா கொண்டாடஅவரது லட்சியங்கள் கொள்கைகளை, கொள்கை அளவிலாது ஏற்றுக் கொள்ளவேண்டும்.
இவை எதுவும் இல்லாமல் பெரியார் மற்றும் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஊரைஏமாற்றி வந்தவர்கள் பெரியார் விழா எடுப்பது மிகவும் வியப்பாக உள்ளது.
கடந்த முதல் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்ஜெயலலிதா. இப்போது பெரியார் விழா கொண்டாடுகிறேன் என்கிறார். ஒரு பக்கம்பக்தர்களையும் மறுபுறம் பகுத்தறிவாளர்களையும் ஜெயலலிதா ஏமாற்றுகிறார் என்றுகருணாநிதி பேசினார்.












Click it and Unblock the Notifications