தமிழகத்துக்கு கூடுதல் நீர் வழங்க ஆந்திரம் ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சென்னை நகருக்கு கூடுதலாகதண்ணீர் திறந்து விடுமாறு ஆந்திர அரசுக்கு தமிழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதை ஆந்திர அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

சென்னை நகரில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆந்திராவில் கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் 25ம் தேதிதண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் வினாடிக்கு 200 கன அடி நீர் திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாகஉயர்த்தப்பட்டு 400 கன அடி நீர் வழங்கப்பட்டது.

அதன்படி இப்போது தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால், தமிழக எல்லையான ஸீரோ பாயின்ட்டில்வினாடிக்கு 251 தான் கன அடி தண்ணீர் வந்து சேர்கிறது.

அதையும் தாண்டி நீர் வந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் பூண்டி ஏரி முற்றிலும் வறண்டுபோய்க் கிடப்பதால்வந்து சேரும் நீரில் பெரும்பகுதியை பூமி குடித்து விடுகிறது.

அதனால் பூண்டி ஏரியில் வினாடிக்கு 219 கன அடி தண்ணீர் தான் தேங்குகிறது. அங்கிருந்து செங்குன்றம் ஏரிக்குபேபி கால்வாய் மூலம் வினாடிக்கு 90 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த நீர் சோழவரம் ஏரி வழியாக செங்குன்றம் வந்தடையும்போது வினாடிக்கு 70 கன அடியாக குறைந்துவிடுகிறது.

காங்கிரீட் தளம் போடப்படாத இந்த சிறிய கால்வாய் (பேபி கால்வாய்) மூலம் தண்ணீர் அனுப்பப்படுவதால்வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் வீணாகிறது. ஆனால், சிறிதும் தண்ணீர் வீணாகாமல் செங்குன்றம் கொண்டுசெல்வதற்கு பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. அந்த கால்வாய் கான்கிரீட் தளத்துடன் கூடியது.

ஆனால், அந்த கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லும் அளவுக்கு பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்புஇல்லை. பூண்டி ஏரியில் 22 கோடியே 50 லட்சம் கன அடி தண்ணீர் இருந்தால் தான் அந்த பெரிய கால்வாயைதிறக்க முடியும்.

கடந்த 31ம் தேதி பூண்டிக்கு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து சேரும் முன் ஏரியில் வெறும் 60லட்சம் கன அடி தண்ணீர் மட்டுமே இருந்தது. கடந்த ஒரு வாரமாக இந்த தண்ணீர் அளவு 8 கோடியே 80 லட்சம்கன அடியாக உயர்ந்துளளது.

தினமும் 2 கோடி கன அடி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே வரத்து இன்னும் 15 நாட்கள்நீடித்தால் பூண்டி ஏரியில் 30 கோடி கன அடி தண்ணீர் தேங்கிவிடும்.

அதன் பின்னர் பெரிய கால்வாய் வழியாக செங்குன்றம் ஏரிக்கு தண்ணீரை விரைவாக கொண்டு செல்ல முடியும்என்கிறது தமிழக பொதுப்பணித் துறை.

செங்குன்றம் ஏரியில் கடந்த 3ம் தேதி நிலவரப்படி 51 கோடியே 20 லட்சம் கன அடி தண்ணீர் இருந்தது.

வெள்ளிக்கிழமை இந்த நீரின் அளவு 49 கோடியே 50 லட்சம் கன அடியாக குறைந்தது. பூண்டி ஏரியில் இருந்துபெரிய கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்தால் தான் செங்குன்றம் ஏரியின் நீர்மட்டத்தை கணிசாமானஅளவுக்கு உயர்த்த முடியும்.

அப்படி செய்தால் தான் சென்னை நகர மக்களின் தீராத தண்ணீர் தாகத்தை இந்த ஏரியால் தீர்க்க முடியும்.

அதற்கு ஆந்திராவில் இருந்து அதிக தண்ணீர் பெறுவது தான் ஒரே வழி. எனவே கண்டலேறு அணையில் இருந்துதிறக்கப்படும் தண்ணீர் அளவை அதிகரிக்குமாறு ஆந்திர அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஆந்திர நீர்ப்பாசன அமைச்சர் வெங்கடேஸ்வர ராவுக்கு, தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர்துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார். அதை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடிதண்ணீர் திறந்து விட ஆந்திர அரசு முன் வந்துள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+