ஆசியத் தொழிலாளர்கள் கையில் வளைகுடா நாடுகள்
துபாய்:
வளைகுடா நாடுகளின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் ஆசியத் தொழிலாளர்களும், வெளிநாட்டுத் தொழிலாளர்களும் அதிக அளவுதேவைப்படுகிறார்கள் என்று அங்குள்ள நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு நாடுகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆசிய தொழிலாளர்கள் அமைச்சக நிபுணர் அபைதுல்லா மதானி பேசுகையில்,ஐக்கிய அரபு நாடுகளின் மக்கள்தொகை ஒரு மில்லியனுக்கும் குறைவாக உள்ளது. அவர்களில் முதியோர்கள் தவிர பெரும்பாலானோர் பெண்கள்மற்றும் குழந்தைகள்.
இவர்களை மட்டும் வைத்துக் கொண்டு நாட்டின் குறிக்கோளை அடைய முடியாது. அதாவது வெளிநாட்டு தொழிலாளர்களின் உதவியின்றி ஐக்கிய நாடுகள்முன்னேற்றமடைவது மிகவும் கடினம்.
சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைனிலிருந்து தொழிலாளர்கள் வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள். இதனால் ஐக்கிய அரபு நாடுகளின் வளர்ச்சியும்,பொருளாதார முன்னேற்றமும் தடைபடுகிறது.
இங்கு வாழும் மக்கள் கடினமாக உழைத்தாலும், அடுத்த 20 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள், குறிப்பாக ஆசியர்கள் தேவைப்படுவார்கள்.
2010 ம் ஆண்டுக்குள் ஐக்கிய அரபு நாடுகளில் ஆசியா மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள்.
அதாவது, விவசாயத்தில் 8 லட்சத்து 44, ஆயிரம் தொழிலாளர்கள், போக்குவரத்துத் துறையில் 8 லட்சம் பேர், ரியல் எஸ்டேட் தொழிலில் 6 லட்சத்து 23ஆயிரம் பேர், சுரங்கத்தொழிலில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர், கட்டிடத் தொழிலில் 2.23 மில்லியன், வர்த்தகத்தில் 2.4 மில்லியன், அரசுத் துறையில் 7.3மில்லியன் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்று அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்றார் மதானி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications