சாத்தூரில் தீப்பெட்டி லாரி-பஸ் மோதல்: 5 பேர் பலி
சென்னை:
சாத்தூர் அருகே தீப்பெட்டி லாரியும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரு வாகனங்களும் தீப்பிடித்துக் கொண்டன. இந்த கோர விபத்தில்5 பேர் உடல் கருகி இறந்தனர். 25 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து தீப்பெட்டிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அதேபோல் திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்குதமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ் சென்று கொண்டிருந்தது.
சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சாத்துரை அடுத்த மேலகாந்திநகர் என்ற இடத்தில் தீப்பெட்டி லாரியும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் தீப்பெட்டி லாரியில் தீப்பிடித்துக் கொண்டது. அந்தத் தீ பஸ்சுக்கும் பரவியது.
லாரியில் லட்சக்கணக்கான தீப்பெட்டிகள் இருந்ததால் தீ மளமளவென்று பரவியது. இதில் பயணிகளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அதிகாலைஎன்பதால் நல்ல தூக்கத்தில் இருந்த பயணிகள் சுதாரிப்பதற்குள் தீயில் சிக்கினர். தப்பிப்பதற்கு வழியைத் தேடுவதற்குள் தீ நாக்குகள் பயணிகளைசுட்டெரித்தன.
இதில் 5 பேர் அந்த இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். பெண்களும், குழந்தைகளும் தீயிலிருந்து தப்ப முடியாமல் கதறித் துடித்தனர்.
தகவல் கிடைத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் இரு வாகனங்களும் தீயில் பெருமளவில் எரிந்துவிட்டன. இந்த விபத்தில் பயணிகள் 5 பேர் தீயில் கருகினர். 25க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் இறந்தவர்களில் கிருஷ்ணசாமி (65), பாத்திமா பீவி (35), அமுதா (25) ஆகிய மூவர் பற்றிய அடையாளங்கள் தெரிந்துள்ளன. மற்றவர்களின்அடையாளம் தெரியாத வகையில் தீயில் கருகியுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 13 பேர் பெண்கள், 5 பேர் குழந்தைகள் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications