40,000 கர்நாடகத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்
சென்னை:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு கிட்டதட்ட நாற்பது நாட்கள் ஆகிறது. இன்னும் காட்டை விட்டு வெளியே கொண்டு வரமுடியவில்லை. அரசு தூதர் நக்கீரன் கோபால் மூன்று முறை காட்டிற்குச்சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும்ஏற்படவில்லை.
ராஜ்குமாரை மீட்பதில் சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்க, இன்னொரு மிகப்பெரிய அபாயத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம்என்று கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன கர்நாடக, தமிழக அரசுகள்.
கர்நாடகத்தின் செல்லப்பிள்ளையான ராஜ்குமார் கடத்தப்பட்டதில் கடும் கோபத்தில் இருக்கும் கன்னடர்களின் ஒட்டு மொத்தகோபம் கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மீது திரும்பியிருக்கிறது.
பிரச்சனை வெடித்தால் கர்நாடகாவில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? இந்த சிக்கலை எப்படிச்சமாளிப்பதுஎன்று இரு மாநில அரசுகளும் சீரியஸாக யோசித்துக்கொண்டிருக்கின்றன.
ராஜ்குமார் காட்டை விட்டு வெளியே வந்ததும் கர்நாடக மாநிலத்தின் பல இடங்களில் கலவரம் நடக்கும் என்றுஎதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது கர்நாடக அரசு. நிலைமை இப்படியிருக்க, கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும்சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இது வரை தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளனர் என்று கணக்கெடுத்துவைத்திருக்கிறது தமிழக அரசு.
கர்நாடக மாநிலம் குண்டல் பேட், சாம்ராஜ்நகர், சிக்கள்ளா, செர்ணபதி, இந்த பகுதிகளில் இருந்தும் மாண்டியா, அபுகூர்இந்தப்பகுதிகளில் இருந்துதான் பெரும்பாலான தமிழர்கள் வந்துள்ளனர். ராஜ்குமார் காட்டை விட்டு வெளியே வந்ததும்,இன்னும் பல இடங்களிலும் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடக்கும் என்று கவலையோடு சொல்கிறது தமிழக உளவுத்துறை.
இது பற்றி கர்நாடக அரசுக்கும் தெரிவித்திருக்கிறது. ராஜ்குமார் பத்திரமாக வரட்டும். தமிழக மக்களுக்கு எந்த ஆபத்தும் வராதுதேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லிருக்கிறதாம் கர்நாடக அரசு.
கர்நாடகாவில் இருந்து திரும்பிய தமிழர்களிடம், தமிழக உளவுத்துறை விசாரணை நடத்தியும் வருகிறது. விசாரித்ததில், இதுவரை பலரைக் கடத்திய வீரப்பன் பணம் தான் கேட்டிருக்கிறான். இந்த முறை தமிழர் நலன் என்கிறான், தமிழ்த் தீவிரவாதிகளைவிடுதலை செய் என்கிறான்.
காவிரி நீர் உடனே கொடு என்கிறான்.
1992-ம் வருடம் காவிரிப் பிரச்சனையில் நாங்க பட்ட கஷ்டமெல்லாம் போதுமுங்க. தெரியாம மாட்டிக்கிட்டோம். இந்த முறைஅந்த மாதிரி கொடூரமாக அவங்க கையில் சிக்கக்கூடாதுன்னுதான் தமிழ்நாட்டுக்கே வந்துட்டோம் என்று கண்ணீர்விடுகிறார்களாம் கர்நாடகாவில் இருந்து வந்த இந்த தமிழக அகதிகள்.
தமிழர்களின் உணர்ச்சி பூர்வமான பேச்சுகளை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கும் அனுப்பியிருக்கிறார்கள் தமிழகஉளவுத்துறை அதிகாரிகள்.
ராஜ்குமார் காட்டுக்குள்ளிருக்கும் போது இங்கே தமிழர்கள் பாதிக்கப்பட்டால், காட்டுக்குள் நிலைமை சீரியஸாகிவிடும்என்பதால், ராஜ்குமார் வெளியே வரும் வரை காத்திருப்போம் என்று சொல்கிறார்கள் கன்னடர்கள்.
ராஜ்குமார், வெளியே வந்து அங்கே நிலைமை நல்லபடியாக இருந்தால் மறுபடியும் அங்கே செல்வோம் என்றும்சொல்கிறார்களாம் தமிழர்கள். இதை எப்படித் தடுப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications