வங்கதேச உறவில் விரிசல் இல்லை ... கூறுகிறது பாக்
நியூயார்க்:
பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவில் விரிசல் இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
நியூயார்க்கில் நடந்த ஐ.நா.சபை மில்லினியம் வருடக் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப்பும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும்சந்தித்துப் பேசாததால் இரு நாடுகளுக்குமிடையேயுள்ள உறவில் விரிசல் என்று நினைக்க வேண்டாம் என்றும் பாகிஸ்தான் தெளிவுபடுத்தியுள்ளது.
பாகிஸ்தான் உயர்அதிகாரி ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில், 1971 ல் வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்தது குறித்து வங்கதேச பிரதமர் ஹசீனா,பாகிஸ்தானை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார். இதனால் இப்போதைக்கு வங்கதேச பிரதமருடன் பேசுவதில்லை என்று ஆட்சியாளர் முஷாரப் முடிவுசெய்துள்ளார் என்றார்.
முன்னதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில், 1971 ல் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தைப்பிரிப்பதற்காக போர் நடந்தது. அந்தச் சண்டையின்போது பலர் இறந்தனர். அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றுவலியுறுத்தினார்.
இதற்கிடையே, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முஷாரப் கூறுகையில், ஐ.நா.மில்லினியம் வருடக் கூட்டத்தில் இரு பிரதமர்களும் சந்தித்துப் பேசாததால் இருநாடுகளுக்கும் உறவு முறிந்து விட்டது என்று பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அதில் சிறிதளவும் உண்மையில்லை என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications