கமாண்டோக்களைத் தயார்படுத்துகிறது தமிழக அரசு?
சென்னை:
இரு மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைக்கு வீரப்பன் ஒத்துவராவிட்டால் நடிகர் ராஜ்குமாரை அதிரடிப்படை மூலம் மீட்க தமிழக அரசு ரகசிய திட்டம்தீட்டியுள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக 50 கமாண்டோக்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர். புதிய திட்டத்தின்படி, புதிதாக ஒரு அதிரடிப்படையை அமைக்க தமிழ அரசுதிட்டமிட்டுள்ளது. இதில், சேர பல எஸ்.பி.க்கள், துணை கமிஷனர்கள் அரசிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக அரசுத் தூதர் கோபால் மூன்று முறை காட்டுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். தமிழ்த் தீவிரவாதிகளைவிடுவிப்பது மற்றும் கர்நாடகத்தில் பல்வேறு சிறைகளில் இருக்கும் தமிழ் தடா கைதிகளை விடுவிப்பது போன்ற இரு நிபந்தனைகளையும் அரசுநிறைவேற்றினால்தான் ராஜ்குமாரை விடுவிப்பேன் என்று வீரப்பன் உறுதியாகக் கூறி வருகிறான்.
ஆனால், வீரப்பனுடன் பேச்சுவார்த்தை மூலமே சுமூகத் தீர்வு காண முடியும் என்று இரு மாநில அரசுகளும் நம்புகின்றன. மத்திய அரசோ,ராஜ்குமாரை மீட்கும் விஷயத்தில் இரு மாநில அரசுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்று கூறியுள்ளது.
வீரப்பன் பிடியிலிருந்து ராஜ்குமாரை மீட்க எல்லாவிதத்திலும் உதவி செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசிடம்கையேந்துவதை இரு மாநில அரசுகளும் தன்மானப் பிரச்சனையாகக் கருதுகிறது.
இதனால், அதிரடி படை ஒன்றை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள கூட்டு அதிரடிப்படையைக் கலைத்துவிட்டு, புதிய அதிரடிப்படையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் போலீஸ் அதிகாரிகள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.
இந்த அதிரடிப்படை அதிநவீன ஆயுதங்கள் கொண்டதாக இருக்கும். இதற்கு எஸ்.பி.அந்தஸ்துள்ள போலீஸ் அதிகாரி தலைமை வகிப்பார். இதில் பங்கேற்கவிருப்பம் உள்ளவர்கள் தமிழக அரசை அணுகலாம் என்று தமிழ்நாடு முழுவதும் போலீஸாருக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை அடையாறு துணைக் கமிஷனர் சைலேந்திர பாபு, தற்போதைய அதிரடிப்படையிலுள்ள எஸ்.பி.பெரியய்யா, முன்பு அதிரடிப் படையில் இருந்துவீரப்பனுடன் நேருக்குநேர் சண்டையிட்டு இரண்டு கைவிரல்களை இழந்த தமிழ்செல்வன் ஆகியோர் புதிய அதிரடிப்படையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதுதவிர, மேலும் பல போலீஸ் அதிகாரிகள், புதிய அதிரடிப்படையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications