பாரீஸை வலம் வந்த விநாயகர் சிலைகள்

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், 5-வது ஆண்டாக விநாயகர் சிலை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட இரண்டு தேர்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டன. இந்த தேர்களை 12 விநாயகர் பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.

ஸ்லோகங்கள் ஓத, மிருதங்கம் போன்ற பாரம்பரிய இந்திய இசைக் கருவிகள் முழங்க பக்தி மனம்கமழ இந்த விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

கொழுத்தும் வெயிலிலும் ஆயிரக்கணக்கான பாரீஸ்வாசிகள் இந்த ஊர்வலத்தை பிரமிப்புடன் பார்த்தனர்.விநாயகர் சதுர்த்தியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த ஊர்வலம் நடந்தது.

பாரீஸிலில் ஐந்தாவது ஆண்டாக நடந்த விநாயகர் சதுர்த்தி இது. இந்த முறை பக்தர்கள் கூட்டம்எதிர்பாராத அளவுக்கு அதிகமாக இருந்தது. 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கூடியிருந்தனர்.இவர்களுடன் பல பிரான்ஸ்காரர்களும் இருந்தனர்.

இந்த ஊர்வலத்திற்கு இலங்கைத் தமிழர் சந்திரசேகரம் ஏற்பாடு செய்திருந்தார். இவர் கட்டிய மாணிக்கவிநாயகர் ஆலயத்திலிருந்து விநாயகர் ரத ஊர்லவம் கிளம்பியது. பாரீஸின் 18-வது மாவட்டத்தில்இந்தக் கோவில் உள்ளது. இப்பகுதி முழுவதுதம் இந்தியர்களும், இலங்கைத் தமிழர்களுமே உள்ளனர்.

காலை 10.30 மணிக்கு ஊர்வலம் கிளம்பியது. வழியெங்கும் பொதுமக்களும், பக்தர்களும் பாலும்,தேனும் கொண்டு விநாயகர் சிலைகளை வழிபட்டனர். பல்வேறு சாலைகள், தெருக்களை வலம் வந்ததேர்கள் கடைசியாக ஐந்து கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்தன. இதற்குநான்கு மணி நேரம் பிடித்தது.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் ஊர்வலத்திற்கு முட்டுக்கட்டை போடும் பாரீஸ் நகராட்சி நிர்வாகிகள்இந்த ஆண்டும் இடைஞ்சல் கொடுத்தனர். போலீஸ் அதிகம் இல்லாததால், சிறிய அளவிலான ரதயாத்திரை மட்டுமே நடத்த வேண்டும் என்று அவர்கள் கூறி விட்டனர்.

1996-ம் ஆண்டு முதல் இந்த ரத யாத்திரை நடந்து வருகிறது. மாணிக்க விநாயகர் கோவில்அமைந்துள்ள லா சாப்பல் பகுதியை குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படுகிறது. காரணம் இங்குகணிசமான அளவில் உள்ள இலங்கைத் தமிழர்கள்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+