நண்பருக்கும் நேரம் ஒதுக்கிய வாஜ்பாய்
நியூயார்க்:
உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள், சந்திப்புகள், கைகுலுக்கல்களை முடித்துக்கொண்ட பிரதமர் வாஜ்பாய் தனது நெருங்கிய நண்பர்களைச் சந்திக்கவும் சிறிதுநேரத்தை செலவிட்டார்.
அமெரிக்காவில் 13 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் வாஜ்பாய். ஐ.நா.சபையின் மில்லனியம் மாநாட்டில் கலந்து கொண்டு அனல் பறக்க பேசினார்.பாகிஸ்தானை சாடினார். பல உலகத் தலைவர்களைச் சந்தித்து பேசினார்.
தற்போது தனிப்பட்ட முறையில் சில நிகழ்ச்சிகளில் வாஜ்பாய் கலந்து கொண்டுள்ளார்.நீண்ட காலமாக குடும்ப நண்பர் போல இருக்கும் முகுந்த் மோடி என்பவரின் வீட்டில்நடந்த இரவு விருந்தில் ஞாயிற்றுக்கிழமை வாஜ்பாய் கலந்து கொண்டார்.
சனிக்கிழமை ஸ்டேட்டன் தீவில் விஸ்வ இந்து பரிஷத், ஓவர்சீஸ் பாரதீய ஜனதாக் கட்சிநண்பர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட விருந்தில் வாஜ்பாய் கலந்து கொண்டார். தான்எப்போதுமே ஒரு ஸ்வயம்சேவக் என்று பிரகடனப்படுத்தி அனைவரையும் நெளியவைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் நேராக முகுந்த் மோடி வீட்டிற்கு சென்றார். இவரது வீடும்ஸ்டேட்டன் தீவில்தான் உள்ளது. அங்கு ஒன்றரை மணி நேரம்வாஜ்பாய்தங்கியிருந்தார்.
இந்த ஒன்றரை மணி நேர விருந்திற்காக சில மாதங்களுக்கு முன்பே வாஜ்பாயியிடம்மோடி தேதி வாங்கியிருந்தார். இதுகுறித்து மோடி கூறுகையில், வாஜ்பாய் இங்குவருவது புதிதல்ல. ஆனால் இப்போது பிரதமராக வந்திருந்தது எங்களுக்குமகிழ்ச்சியைத் தந்தது என்றார்.
விருந்திற்கு வாஜ்பாய் தவிர, வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், இந்தியத் தூதர்நரேஷ் சந்திரா ஆகியோரையும் டாக்டர் மோடி அழைத்திருந்தார். ஆனால்அவர்களால் வர முடியவில்லை.
விருந்தில், வாஜ்பாய், அவரது டாக்டர் மற்றும் சிலரே கலந்து கொண்டனர். பாதுகாப்புமற்றும் வாஜ்பாய் உடல் நிலைகாரணமாக அதிக கூட்டம் சேர்க்கவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications