யாருடன் கூட்டணி .. திருச்சியில் புதிய தமிழகம் முடிவு
சென்னை:
சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி திருச்சியில் அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டில் முடிவுசெய்வோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சென்னையில் அவர் செவ்வாய் கிழமை அளித்த பேட்டி:
தென் மாவட்டங்களில் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் தலித் மக்களுக்கு உரிய முறையில் செய்து தர வேண்டும்.
அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படுகின்றனவா என்பதை கண்டறிய சட்டமன்ற உறுப்பினர்கள், சமுதாய நலனில் அக்கறையுள்ள நல்லமனிதர்களை கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான 6 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இவற்றை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அந்த இடங்கள் நிரப்பப்படும் வரையில் பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் வேலை வழங்குவதை அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் மினி பஸ்களை அரசு இயக்குகிறது. இதில் 50 சதவீதம் எஸ்.சி.எஸ்.டி. பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications