இந்தியாவிலிருந்து பாக்.கிற்குள் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் கட்ச் பகுதி வழியாக பாகிஸ்தானிற்குள் நுழைய முயன்ற ஐந்து வங்கதேச நாட்டவர் கைது செய்யப்பட்டனர்.
கட்ச் டி.எஸ்.பி. சிங் கூறுகையில், போலீஸாரால் கைது செய்யப்பட்ட 5 பேரும் குற்றம் எதுவும் செய்ததற்காகக் கைது செய்யப்படவில்லை. ஆனால்அவர்கள் இந்திய எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்றதே குற்றம்தான்.
மேலும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.உளவாளிகளுக்கு இவர்கள் தகவல் கொடுத்து வருவதாக நிரூபிக்கப்பட்டால், அவகர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.
கட்ச் பகுதியிலிருந்து பாகிஸ்தான் செல்வதற்கான வழியை, கட்ச் பகுதியைச் சேர்ந்த டூரிஸ்ட் கைடு ஒருவரை ஐந்து பேரும் நாடியுள்ளார்கள் என்றும்விசாரணையில் தெரிய வந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications