என்ன ஆச்சு சிதம்பரத்திற்கு?
சென்னை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்த தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், த.மா.கா.வின் மூத்ததலைவருமான சிதம்பரம் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமாகா செயற்குழு சென்னையில் செவ்வாய்க் கிழமை கூடியது. சத்தியமூர்த்தி பவனில் த.மா.கா தலைவர் மூப்பனார் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில்மாநில நிர்வாகிகள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், தனுஷ்கோடி ஆதித்தன், சோ.பாலகிருஷ்ணன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் வரவில்லை.
சிதம்பரம் ஏன் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி தமாகா வட்டாரத்தில் எழுப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில்சிதம்பரம் நகரில் நடந்த செயற்குழு கூட்டத்திலும் சிதம்பரம் கலந்து கொள்ளவில்லை.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாண்டிச்சேரி உள்துறை அமைச்சர்கண்ணனும் இதில், கலந்து கொள்ளவில்லை. இருவருக்கும் ஏற்கனவே ஒத்துக் கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகள் இருந்ததால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நடந்த த.மா.கா.செயற்குழுக் கூட்டத்திலும் இவர்கள் இருவரும் கலந்து கொள்ளாதது அவர்கள் செயற்குழுக் கூட்டங்களைவேண்டுமென்றே புறக்கணித்து வருகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
மேலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை இருவரும் விரும்பவில்லை. அதுவும் கூட்டணி ஆட்சியில் சேர்க்க முடியாது என்று ஜெயலலிதா பகிரங்கமாகஅறிவித்த பிறகும் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது தமிழ் மாநில காங்கிரசுக்கு இழுக்கு என்று அவர்கள் கருதுகிறார்கள்.
தி.மு.க.வுடனான கூட்டணியைத்தான் இவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடக்கும் கூட்டங்களை இவர்கள்புறக்கணிக்கிறார்கள் என்று தெரிகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications