ஆந்திராவில் 72 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
சென்னை:
சென்னை காசிமேடு மீன் பிடித் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்கச் செல்கின்றன. ஆந்திரக்கடல் பகுதியில் மீன் வளம் அதிகம் உள்ளதால், சென்னை விசைப்படகு மீனவர்கள் அங்கு செல்கின்றனர்.
தங்கள் பகுதியில் புகுந்து சென்னை மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு ஆந்திர மீனவர்கள் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதைபொருட்படுத்தாமல் சென்னை மீனவர்கள் ஆந்திரப் பகுதிக்குள் நுழைந்து மீன்களை அள்ளிக் கொண்டு வந்து விடுகின்றனர்.
சில நேரங்களில் இப்படி வரும் சென்னை மீன்வர்களை ஆந்திர மீனவர்கள் படகுகளில் வழி மறித்து பிடித்து விடுகின்றனர். பின்னர் அவர்களிடம் அபராதத்தொகையை வசூலித்து விட்டு அனுப்பி விடுகின்றனர்.
இந்த தைரியத்தில் சென்னை மீனவர்களின் ஊடுருவல் நீடித்து வந்தது. கடந்த 10ம் தேதி காசிமேடு துறைகத்தில் இருந்து 9 படகுகளில் 72 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ராமதீர்த்தம் என்ற கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு கட்டுமரங்களில் வேகமாக வந்த ஆந்திர மீனவர்கள், சென்னை மீனவர்களின் விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர்.
சென்னை மீனவர்களை அடித்து உதைத்தனர். பின்னர் விசைப்படகுகளுடன் அவர்களை சிறைப்பிடித்தனர்.
தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட தகவல் சென்னை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்கத்திற்கு கிடைத்ததும், இங்கிருந்து மீனவர் பிரதிநிதிகள் குழுஆந்திராவுக்கு சென்றுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications