வாஜ்பாய் உரைக்கு முன் இந்து மத வழிபாடு
வாஷிங்டன்:
அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபையில், பிரதமர் வாஜ்பாய் உரையாற்றுவதற்கு முன் இந்து பூசாரி ஒருவர் வழிபாடு நடத்துவார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வாஜ்பாய் 13 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா.மில்லினியம் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். புதன்கிழமைஅவர் தலைநகர் வாஷிங்டன் பயணமாகிறார். ர் 14-ம் தேதி அவர் நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபையில் பேசுகிறார்.
வாஜ்பாய் உரையாற்றத் தொடங்கும் முன் இந்து மத பூசாரி ஒருவர் வழிபாடு நடத்தி நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்துமத பூசாரி ஒருவர் பக்தி உரை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும் சர்வதேச உறவுக் கமிட்டித் தலைவருமான பிரவுன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அவர்தான்,அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உரையாற்றுவதற்கும், அதற்கு முன் பூசாரி ஒருவர் வழிபாடு நடத்துவதற்கும் சபாநாயகர் டென்னிஸ்ஹாஸ்டெர்ட்டுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்றிருந்தார்.
காங்கிரஸ் பூஜைக்காக ஒஹிமா பார்மாவில் உள்ள சிவவிஷ்ணு கோவிலிலுள்ள பூசாரி வெங்கடாச்சலபதி சமுல்தரலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார். வாஜ்பாய்பேசத் துவங்குவதற்கு முன்பு, 9 மணிக்கு சமுல்தரலா நாடாளுமன்றத்துக்கு வருவார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதுவரை முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆகியோர் வழிபாடு நடத்தியுள்ளனர். இந்து சாமியார் பக்தி உரைநடத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
அதற்கு முன்பாக, பிரதமர் வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக வாஷிங்டன் வரும் பிரதமர் வாஜ்பாய்க்கு, ஆன்ட்ரூஸ் விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படும். அங்கிருந்து வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுவார்.
வெள்ளை மாளிகையில் அவர் அமெரிக்க அதிபர் கிளின்டன் உள்பட பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்த்தித்துப் பேசுவார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications