தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிறார் கெளடா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு ஆதராக நீலகிரியில் 18-ம் தேதிமுன்னாள் பிரதமர் தேவெ கெளட தலைமையில் போராட்டம் நடத்த தமிழ்நாடுமதச்சார்பற்ற ஜனதாதளம் முடிவு செய்துள்ளது.
மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் வடிவேலு இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,நீலகிரி பச்சைத் தேயிலையின் விலை கெளட பிரதமராக இருந்தபோது ரூ. 19 ஆகஇருந்தது. இப்போது ரூ. 4 ஆக மாறியுள்ளது. இதுவும் கூட பலவிதபோராட்டங்களுக்குப் பிறகுதான் கிடைத்தது.
ஊட்டியிலுள்ள இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலையை மத்திய அரசு மூடியதால்,பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டித்தும்போராட்டம் நடத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications