இன்போசிசுடன் ஒப்பந்தம் ..ஹைதராபாத் மையத்திற்கு ரூ. 225 கோடி ..பெங்களூரில் ஆய்வகம் ..
டெல்லி:
உலகில் சிறந்த சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனமும், இந்தியாவில்சிறந்த சாப்ட்வேர் நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனமும் உலகளாவிய அளவில்ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸும், இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்காக சாப்ட்வேர் வசதிவாய்ப்புகளை இரு நிறுவனமும் ஏற்படுத்தித் தரும்.
இதுதவிர வாடிக்கையாளர் உறவு மேம்பாடு, இ-காமர்ஸ், நிதி, இன்சூரன்ஸ் மற்றும்சில்லரை விற்பனை ஆகிய துறைகளுக்கான சாப்ட்வேர்களும் உருவாக்கப்படும்.
இதற்கிடையே, மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனத்தின் 10-வது ஆண்டு விழாநிறைவையொட்டி www.msn.co.inஎன்ற புதிய வெப் தளத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதை இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் செய்துகொண்டுள்ள உலகளாவிய ஒப்பந்தத்தில்கையெழுத்திடும் நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ்தெரிவித்தார்.
இது தவிர, ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாப்ட் வளர்ச்சி மையத்துக்கு மேலும்ரூ.225 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பெங்களூரில்மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பில் புதிய டாட் நெட் என்ற பரிசோதனைக் கூடம்அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
தமிழ் சாப்ட்வேர் வளர்ச்சிக்கு உதவ கேட்ஸ் ஆர்வம்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications