For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் சாப்ட்வேர் வளர்ச்சிக்கு உதவ கேட்ஸ் ஆர்வம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழ் உள்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் சாப்ட்வேர் வளர்ச்சிக்கு உதவமைக்ரோ சாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் ஆர்வம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் கம்ப்யூட்டர் கல்வியைக் கொண்டு செல்ல 5மில்லியன் டாலர் நிதி தரவும் பில் கேட்ஸ் முன்வந்துள்ளார்.

ஆண்டுக்கு 1 மில்லியன் டாலர் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதியுதவியைகேட்ஸ் செய்யவுள்ளார்.

மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் இத்தகவலைத்தெரிவித்தார். உலகின் நம்பர் ஒன் பணக்காரரான பில்கேட்ஸ் புதன்கிழமை இரவு ஒருநாள் பயணமாக டெல்லி வந்தார்.

வியாழக்கிழமை அமைச்சர் பிரமோத் மகாஜனை கேட்ஸ் சந்தித்தார். சுமார் 50நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மகாஜன்பேசுகையில், இந்தியாவில் தகவல் தொடர்புப் புரட்சி ஏற்பட கேட்ஸ் மிகவும்ஆர்வமாக உள்ளார்.

100 கோடி மக்கள் உள்ள இந்தியா போன்ற நாட்டுக்கு கேட்ஸ் கொடுத்துள்ள தொகைபோதுமானதல்ல. இருப்பினும் அவரது இந்த நிதியுதவி மிகப் பெரிய, சரியானசமயத்தில் செய்யப்பட்டுள்ள ஒன்று. இது இந்தியாவுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, கம்ப்யூட்டர் கல்வியில் செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் உள்பட பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள்குறித்து கேட்ஸ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பில் கேட்ஸ் நிதியுதவி செய்யவுள்ள திட்டத்திற்கு மீடீயா லேப் இந்தியா என்றுபெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து ஆண்டு இறுதிக்குள் இறுதி வடிவம்தரப்பட்டு விடும். இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்வதோடு நின்று விடாமல்தேவையான ஆலோசனைகள், கருத்துக்கள் ஆகியவற்றையும் கேட்ஸ் தரவுள்ளார்.

தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், மராத்தி ஆகிய இந்திய மொழிகளில்சாப்ட்வேர் வளர்ச்சிக்கு உதவுவும் கேட்ஸ் உறுதியளிள்ளார்.

வட கிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் நெட்வொர்க்கைஏற்படுத்தவும் கேட்ஸ் உதவவுள்ளார்.

இந்த சந்திப்பு மிகவும் வெற்றிகரமானதாக இருந்தது. இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியில் கேட்ஸின் பங்கு மிகவும் முக்கியமானது என்றார் மகாஜன்.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் நடந்த இந்த சந்திப்புக்குப் பிறகுவெளியே வந்த பில் கேட்ஸ் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. வேகமாக சென்றுவிட்டார். கருப்பு கோட், சூட்டில் இருந்த கேட்ஸ், சந்திப்புக்குப் பிறகு வேகமாக தனதுஹோட்டலுக்குச் சென்று விட்டார்.

இன்போசிஸுடன் ஒப்பந்தம்:

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ்டெக்னாலஜியுடன், கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றைசெய்து கொள்ளவுள்ளது.

இது தவிர பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், தகவல் தொழில்நுட்பநிறுவனங்களன் தலைவர்களும் கேட்ஸை சந்திக்கிறார்கள். வியாழக்கிழமையே கேட்ஸ்அமெரிக்கா திரும்புகிறார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X