ஊரெல்லாம் இதே பேச்சு. அகமதாபாத்தில் கவனம் ஈர்த்த ஹர்திக் பாண்டியா காதலி.. யார் இந்த மஹிகா சர்மா?

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மாவுடன் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த வெற்றியை சக வீரர்களுடன் கொண்டாடியதை விடவும் அகமதாபாத் மைதானத்தில் காதலியுடன் கொண்டாடியதே அதிகம். இதனால் சோசியல் மீடியாவில் மஹிகா சர்மா குறித்த தேடல் அதிகரித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியை ரசிகர்களும், வீரர்களும் கொண்டாடி வருகின்றனர். அகமதாபாத் மைதானத்திலேயே இந்திய அணி வீரர்களின் கொண்டாட்டம் உச்சத்தில் இருந்தது. அதில் ஹர்திக் பாண்டியாவின் கொண்டாட்டம் எல்லை மீறியது என்றே சொல்லலாம்.

T20 World Cup 2026

ஏனென்றால் தனது காதலியான மஹிகா சர்மாவுடன் ஹர்திக் பாண்டியா எல்லை மீறிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். வெற்றியைக் கொண்டாட அமைக்கப்பட்ட மேடையில் ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மாவுடன் சிறிது நேரம் படுத்துக் கொண்டே ரொமான்ஸ் செய்ய தொடங்கிவிட்டார். அதேபோல் மஹிகா சர்மாவை தனது மடியில் அமர வைத்து கொண்டாடினார்.

ஒரு கட்டத்தில் சக வீரர்கள் இருக்கிறார்கள் என்பதையே ஹர்திக் பாண்டியா மறந்துவிட்டார். இதையடுத்து மஹிகா சர்மாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதேபோல் மஹிகா சர்மா யார் என்பதையும் ரசிகர்கள் தேட தொடங்கியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் மஹிகா சர்மா சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கிறார்.

அதேபோல் மாடலிங் துறையில் மஹிகா சர்மா உச்சத்தில் இருப்பவர். ஏனென்றால் பாலிவுட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான மனீஷ் மல்ஹோத்ரா உள்ளிட்டோரின் முதன்மை மாடலாக மஹிகா சர்மா இருந்து வருகிறார். எல்லி, கிரேசியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் விளம்பரத் தூதராக வலம் வருகிறார். தனிஷ்க், விவோ உள்ளிட்ட நிறுவனங்களுக்காக மாடலாக பணியாற்றி வருகிறார்.

இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் ஹர்திக் பாண்டியாவின் மகன் அகஸ்தியாவும் மஹிகா சர்மாவுடன் பயணிக்க தொடங்கி இருக்கிறார். இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவுடன் அனைத்து போட்டிகளுக்கும் மஹிகா சர்மா பயணித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+