ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!
அகமதாபாத்: டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பின், நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மாவுடன் உற்சாகமாக கொண்டாடினார். அகமதாபாத் மைதானத்தில் இருவரும் ஜோடியாக வலம் வந்ததோடு, கொஞ்சம் எல்லை மீறிய கொண்டாட்டத்திலும் ஈடுபட்டது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

சிறப்பாக பவுலிங் செய்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருதையும், ஹாட்ரிக் அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினர். இந்த வெற்றிக்கு பின் இந்திய அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். வெற்றியைத் தொடர்ந்து மைதானத்திற்குள் வீரர்களின் குடும்பத்தினரும் அனுமதிக்கப்பட்டனர்.
கவுதம் கம்பீர் மனைவி நடாஷா மற்றும் அவரது குழந்தைகள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மனைவி தேவிஷா ஷெட்டி, சஞ்சு சாம்சனின் மனைவி சாருதலா, பும்ரா மனைவி சஞ்சனா கணேசன் உள்ளிட்ட பலரும் வீரர்களுடன் இணைந்து கொண்டாடினர். அதேபோல் ஹர்திக் பாண்டியாவின் காதலி மஹிகா சர்மாவும் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டார்.
இதன்பின் ஹர்திக் பாண்டியா தனது காதலியான மஹிகா சர்மாவுடன் இணைந்து ஒட்டுமொத்த மைதானத்தையும் சுற்றி வந்தார் என்றே சொல்லலாம். அதேபோல் மைதானத்திலேயே ஹர்திக் பாண்டியா காதலி மஹிகாவுடன் அதிக நெருக்கம் காட்டினார். ஒரு கட்டத்தில் மைதானத்தில் இருந்தவர்களே முகம் சுளிக்கும் அளவிற்கு எல்லை மீறத் தொடங்கினர்.
அதுமட்டுமல்லாமல் விருது விழா நடந்த மேடையில் இருவரும் படுத்துக் கொண்டே உரையாடிக் கொண்டிருந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் ஹர்திக் பாண்டியாவுடன் மஹிகா சர்மா ஒன்றாக வலம் வந்தார். விமான நிலையத்தில் மஹிகா சர்மாவுடன் ஹர்திக் பாண்டியா நெருக்கம் காட்டிய புகைப்படங்கள் பேசுபொருளாகியது.












Click it and Unblock the Notifications