Ratheesh: டாஸ்மாக் ஊழல் வழக்கில் திருப்பம்.. ரத்தீஷ்க்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் ஊழல் வழக்கில் தேடப்படும் நபரான ரத்தீஷ்க்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படும் ரத்தீஷ், கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக இந்த ரெட் கார்னர் நோட்டீசை இண்டர்போல் பிறப்பித்துள்ளது. ரத்தீஷ்க்கு எதிராக ஏற்கனவே லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கட்ட நிலையில், தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Ratheesh

டாஸ்மாக் முறைகேடு வழக்கு

கடந்த திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக பார் டெண்டர் முறைகேடு, டிரான்ஸ்போர்ட் ஒப்பந்தங்களில் முறைகேடு, புதிய மதுபானங்களுக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு என்று அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் ரத்தீஷ் உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

ரத்தீஷ் தலைமறைவாக இருந்து வருகிறார். சட்டசபையில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் விஜய் பேசும்போது, 'ரத்தீஷ் துபாய்க்கு சென்று ஓடி ஒளிந்து கொண்டார்' என்று கூறியிருந்தார். ரத்தீஷை கைது செய்வதற்கு சர்வதேச போலீஸ் உதவியை மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே நாடி உள்ளனர்.

மேலும் பலர் சிக்கக்கூடும்?

இந்த நிலையில் சர்வதேச போலீஸ் அமைப்பு அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது உலகம் முழுவதும் உள்ள போலீஸ் துறையினருக்கு சர்வதேச போலீஸ் அமைப்பு விடுக்கும் அறிவிப்பாணை ஆகும். இவர் தேடப்படும் குற்றவாளி ஆவார், இவரை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்பதுதான் இந்த நோட்டீசின் முக்கிய அம்சம் ஆகும்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ரத்தீஷ்க்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு வழக்கு மட்டுமின்றி மேலும் பல வழக்குகளில் ரத்தீஷ் பெயர் அடிபடும் நிலையில், அவர் கைது செய்யப்பட்டால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்றும் பின்னணியில் பலர் சிக்கக்கூடும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+