மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?
சென்னை: மநீம பொதுக்குழுவில் பேசி முடிக்கப்பட்டது போல திமுக தலைமையிடம் 6 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், ஆனால் இரண்டு தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. கிடைக்கும் எண்ணிக்கையில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை கேட்டுப்பெறுவதில் கமல் உறுதியாக உள்ளாராம். தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் களம் எப்போதுமே உட்சபட்ச ஹீட்டில் தான் இருக்கும்.
அதிலும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் வெற்றி பெற பாஜக அதிதீவிர முனைப்பு காட்டி வரும் நிலையில் 2026 தமிழக தேர்தல் களம் கொதிநிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. கூட்டணி கணக்குகள் கிளைமேக்சை அடைந்து கிட்டத்தட்ட அணிகள் முடிவாகியுள்ள நிலையில், தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் அனல் பறக்கின்றன.

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை யார் முடிவு செய்வது என்திலேயே குழப்பம் நீடித்து வரும் நிலையில் திமுக முகாம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கும் நிலையில் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் சலசலப்பு ஏற்பட்டாலும், அண்மையில் நடைபெற்ற சிதம்பரம்-ஸ்டாலின் சந்திப்பு அந்த சலசலப்பு சத்தத்தை ஓரளவிற்கு ஓய வைத்திருக்கிது. கூட்டணி கட்சிகளின் பலமறிந்து அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதிலும், யாரையும் அண்டர் எஸ்டிமேட் செய்துவிடக் கூடாது என்பதிலும் திமுக தலைமை மிக கவனமாக காய் நகர்த்தி வருகிறது. அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யமும் திமுகவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.
மக்கள் நீதி மய்யமும் திமுகவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை
இன்று திமுக குழுவுடன் மநீம மய்ய குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம், தொகுதி பங்கீடு விவகாரத்தை கோழி அடை காப்பது போல காத்து வருகிறோம் என்றும், குஞ்சு பொரித்து வரும் போது எத்தைன தொகுதிகள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிய வரும் என்றும் கூறியுள்ளார். நாம் விசாரித்த வரை மநீம சார்பில் ஆறு தொகுதிகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் ஆறு தொகுதிகளை திமுக ஒதுக்குமா என்று தெரியவில்லை. ஆனால் குறைந்த பட்சம் இரண்டு தொகுதிகள் மநீம-வுக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படடாலும், தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையாவது கேட்டு பெற்றிட வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருக்கிறார். குறிப்பாக சென்னையில் மயிலாப்பூர், ஆலந்தூர், வேளச்சேரி தொகுதிகளும், கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், மதுரை மத்தி, ஸ்ரீரங்கம், உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தொகுதிகள் கமலின் விருப்ப பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும், கூறப்படுகிறது. தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி எண்ணிக்கையில் மேலே சொன்ன சாதகமான தொகுதிகளையாவது கேட்டுப் பெற்றிட வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
வேட்பாளர்கள் யார்?
மக்கள் நீதி மய்யம் சார்பில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்கள் யார் என்ற தேர்வும் விருவிருப்பாகவே நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மநீம சார்பில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மௌரியா, திரைப்பட பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட வெகு சிலரின் பெயர்கள் ஸ்ட்ராங்காக அடிபடுகிறது. ஏற்கனவே திமுக சார்பில் கமல் ராஜ்யசபா எம்பியாகிவிட்ட நிலையில், சட்டமன்றத்திலும், மநீம குரல் ஒலிக்க வேண்டும் என கமல் நினைக்கிறார். அதற்காக சில சமரசங்களை் செய்ய வேண்டி வந்தாலும், அதற்கும் அவர் தயாராகவே இருப்பதாக தெரிகிறது. சர்வைவல் ஆஃப் பிட்டஸ்ட் என்ற தத்துவத்தின் பேரில் நாங்கள் இருவரும் டார்வின் கோத்திரம்... வி வில் சர்வைவ் அண்ட் வி வில் கண்டின்யூ என்ற கமலின் குரல் அவர் சமரசங்களுக்கு தயராக இருப்பதையே காட்டுகிறது.
- சிறப்பு நிருபர்
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..!












Click it and Unblock the Notifications