மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து மின்சாரம்...
சென்னை:
தமிழ்நாட்டில் நவீன தொழில்நுட்ப உதவியுடன், மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமெரிக்கநிறுவனம் முன்வந்துள்ளது.
அந்த நிறுவனத்தின் தலைவர் சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் தற்பொழுது தண்ணீரில் இருந்து தயாரிக்கப்படும் நீர் மின்சாரம், நிலக்கரியில் இருந்து தயாரிக்கப்படும் அனல் மின்சாரம் போன்றவைதான்பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கும் மின்சாரம் மிகச்சிறிய அளவில் நடைமுறையில் இருக்கிறது.
நீர் மற்றும் நிலக்கரியின் மூலமாக மின்சாரம் தயாரிக்க மிக அதிகளவில் செலவுகள் ஆகின்றது. சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கும் மின்சாரத்திற்கும் அதிகஅளவில் செலவுகள் ஆகின்றது.
ஆனால் மிகக்குறைந்த செலவில் மண்ணெண்னையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமெரிக்காவில் உள்ள பிரபல ஈ.எஸ்.எஸ்தொழில் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் ஜெயந்திநாதன் அமெரிக்கத் தமிழர் ஆாவார். இவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்தவர் பின் நிருபர்களை சந்தித்தார். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு நல்ல வசதி வாய்ப்புகள் இருக்கிறது.
தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முன்னேற்ற முதல்வர் கருணாநிதி பாடுபட்டு வருகிறார். முதல் அமைச்சரின் ஆர்வம், தமிழகத்தில் உள்ள வசதிவாய்ப்புகளும், என் போன்ற அமெரிக்கத் தமிழர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க ஊக்கப்படுத்தும் விதத்திலும் உள்ளது.
நான் தமிழகத்தில் மூன்று தொழில்களை தொடங்கும் திட்டத்துடன் வந்துள்ளேன்.என்னுடைய முதல் திட்டம், மிகக் குறைந்த செலவில், மின்சாரம்தயாரிக்கும் திட்டமாகும். அதாவது கிராமப்புறங்களில் ஏழை-எளிய மக்கள் பயன்படுத்தும் நவீன தொழில் நுட்ப மண்எண்ணை விளக்கு ஒளியில் இருந்துகிடைக்கும் வெப்பத்தின் முலம் இந்த மின்சாரம் தயாரிக்கலாம்.
இந்த மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப மண்எண்னை விளக்கு லூபு விளக்கு என்று அழைக்கப்படும். இந்த விளக்கை தயாரிக்கஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும். இதற்கான தொழிற்சாலை தொடங்க மூன்றுகோடிரூபாய் முதல் ஆறுகோடிரூபாய்வரை செலவாகும்.
முதல் அமைச்சரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த திட்டங்களை தமிழகத்தில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் ஜெயந்தி நாதன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications