கன்னடர்களுக்கு எதிராக தமிழகத்தில் போஸ்டர்கள்
சென்னை:
ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தின் எதிரொலியாக, கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டால்,தமிழகத்திலுள்ள கன்னட அதிகாரிகள் தாக்கப்படுவார்கள் என தமிழகத்தின் பல பகுதிகளில்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ராஜ்குமார் கடத்தப்பட்டு நாற்பத்தியாறு நாட்கள் ஆகின்றது. விவகாரம் இன்னும் முடிவுக்குவராத நிலையில் தமிழக, கர்நாடக அரசுகள் தொடர்ந்து கவலையுடன் ராஜ்குமாரின் விடுதலைக்காககாத்திருக்கின்றன.
காட்டிற்குள் நடத்து கொண்டிருக்கும் விஷயங்கள் தவிர, தமிழ்நாடு விடுதலைப்படையில் உள்ளவர்கள் யார்,யார்?, காட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. காட்டிற்குள் இருக்கும் தீவிரவாதிகள், சிறையில்இருக்கிற தீவிரவாதிகள் தவிர வெளியில் இருப்பவர்கள் யார் யார், அவர்களின் பின்னனி, கடந்த காலவாழ்க்கை என்று துல்லியமாக புள்ளி விபரங்களைச் சேகரித்து வருகிறது தமிழக அரசு.
குறிப்பாக, பெரம்பலுர், பெண்ணாடம், கடலூர் உட்பட பல இடங்களில் உள்ள பிரமுகர்கள் பற்றியும்தகவல்கள் சேகரித்து வருகிறது தமிழக அரசு.
ராஜ்குமார் எப்படியும் பத்திரமாக வெளியே வந்துவிடுவார். அவர் வந்த பிறகு அதிரடிப்படையின்ஆக்ஷன் மிகத்தீவிரமாகவே இருக்கும் என்று காட்டில் உள்ள வீரப்பனுக்கும், தீவிரவாதிகளுக்கும்நன்றாகவே தெரியும். தேவைப்பட்டால் ராணுவம் கூட காட்டிற்குள் இறங்கும் என்பதையும் காட்டில்உள்ளவர்கள் நன்கறிவார்கள்.
ஆறாயிரம் கிலோமீட்டர் பரப்பளவு உள்ள அடர்ந்த காட்டில் வீரப்பனையோ, அவனுடன்உள்ளவர்களையோ பிடிப்பது என்பது சற்று கடினமான விஷயமே என்றாலும் முழுமுயற்ச்சியுடன்களமிறங்கும் அதிரப்படையின் நடவடிக்கையில் இருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கப் போகிறார்கள்?அதற்கு என்னென்ன திட்டங்கள் அங்கே தீட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று பல கோணங்களிலும்கவனித்து வருகிறது தமிழக அரசு.
இதற்கு நடுவே, ராஜ்குமார் வெளியே வந்தபிறகு கர்நாடக மாநிலத்தில் உள்ள முப்பது லட்சம்தமிழர்களுக்கு ஏதாவது ஆபத்து நேருமோ? அப்படி எதாவது நடக்குமானால் அதை தடுப்பது எப்படிஎன்று தீவிரமாகவே ஆலோசித்து வருகிறது தமிழக அரசு. இது பற்றி கர்நாடக அரசுடனும்ஆலோசனை நடத்தியிருக்கிறது.
நிலைமை இப்படி இருக்க, தமிழ்தீவிரவாதிகளும் ராஜ்குமார் விடுதலைக்குப்பிறகு கர்நாடகாவில் உள்ளமுப்பது லட்சம் தமிழர்களுக்கு ஆபத்து வருமோ? அப்படி எதாவது நடந்தால் அதற்கு பதிலடியும்கொடுக்க வேண்டும் என்றும் உறுதியாகவே இருக்கிறார்களாம். இதையெல்லாம் உறுதி செய்யும்சம்பவம் நடந்து முடிந்திருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் தீடீரென்று ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தற்பொழுதைய தமிழகஅரசின் தலைவலிக்கு காரணமாக இருக்கிறது.
ராஜ்குமார் விடுதலை தாமதமாகிக்கொண்டிருக்க கொதித்துப்போன, கர்நாடகாவில் உள்ள கன்னடஅமைப்புகள் ராஜ்குமார் வெளியே வரட்டும். அதன் பிறகு இங்குள்ள தமிழர்கள் படும் பாட்டைப்பாருங்கள் என்கிற ரீதியில் அறிக்கைகள் விட்டன.
குறிப்பாக, கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பின் தலைவர் ஜனகரே வெங்கட்ராமையாவிடுத்துள்ள அறிவிப்பு, தமிழ்தீவிரவாதிகளை கடும் கோபத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
ராஜ்குமார் திரும்பும் வரை தமிழ்படங்கள் இங்கே ஓடலாம், தமிழ் நாட்டு வாகனங்கள் வந்துசெல்லலாம், தமிழர்களும் இங்கே நடமாடலாம். ராஜ்குமார் திரும்பிய பிறகு கர்நாடகாவில் நடக்கும்சம்பவங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று எச்சரிக்கை விடுக்கும் தொணியில் பேசியிருந்தார்வெங்கட்ராமையா. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்களது கோபக்கணைகளை வீசியுள்ளன சிலஅமைப்புகள்.
கடலூர், பெண்ணாடம், திட்டக்குடி, தொழுதூர் என்று கடலூர் மாவட்டத்தின் தென் கோடிப்பகுதிகளில்தீடீரென்று செவ்வாய்க்கிழமை இரவு பகிரங்கமாக சில போஸ்டர்கள் உதயமானது. வெள்ளைபோஸ்டரில் கருப்பு மையினால் அச்சிடப்பட்ட போஸ்டரில்:
புரட்சி செய்! வாழ்க தோழர் தமிழரசன். உரிமை எடுத்துக்கொள்
வெல்க புரட்சி வீரன் தெய்வ லெனின் கொள்கை.
கொதிக்கிறார்கள் புரட்சி வீரன் தெய்வ லெனினின் தோழர்கள். தமிழர் நாட்டு தமிழர்கள் மானமறவர்கள் என்பதை உறுதிப்படுத்தத் துடிக்கிறார்கள்.
கடந்த 5-9-2000 அன்று வெளியான நாளிதழ் செய்தியில் கன்னட இனவெறி அமைப்பான கன்னடரக்ஷன வேதிகே என்ற அமைப்பின் தலைவர் ஜனகரே வெங்கட்ராமையா என்பவர் சொன்னதாகஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ராஜ்குமார் பெங்களூருக்கு வந்ததும் முதல் வேலையே தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதுஎன்பதுதான் அது. மாவீரன் வீரப்பனார் ராஜ்குமாரைஅழைத்துச் சென்ற உடன் கன்னடஇனவெறிக்கூட்டம் நடத்திய வன்முறைத்தாக்குதலில் தமிழர் மறவர் தோழர் சிவக்குமார்படுகொலையானார். அன்றே தமிழகத்தில் பிழைத்துவரும் நான்கு லட்சம் கன்னடர்களில் உடனேஇருநூறு பேரையாவது வெட்டிச் சாய்திருந்தால் இப்படி பேசியிருக்கமாட்டார்கள்.
நடிகர் ராஜ்குமார் பெங்களூர் திரும்பிய பிறகு தமிழர்கள் தாக்கப்படுவார்களேயானால், தமிழ் நாட்டில்வாழும் நான்கு லட்சம் கன்னடர்களில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள்அவர்களில் எவரும் திரும்பமாட்டார்கள் என தெரிவித்துக்கொள்கிறோம்.
யார் அச்சடித்தார்கள்? எப்படி எவருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக எப்படி இந்தப்போஸ்டர்களை ஒட்டினார்கள் என்றும் தீவிரமாக விசாரித்து வருகிறது தமிழக காவல்துறை.
தமிழ் தீவிரவாதிகள், விடுதலைப்படையினர் என்று போலீஸார் லிஸ்ட் எடுத்துள்ள பிரமுகர்கள், நபர்களைதொடர்ந்து கண்காணித்து வந்தும் இது எப்படி நடந்தது என்று அதிர்ந்து போயிருக்கிறது தமிழககாவல்துறை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications